
இந்த அறிவுரையைப் புறக்கணிக்க அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர்.
அல்குர்ஆன் 74:49,50,51என்ற இறைவசனத்தை மெய்ப்பிக்கும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துடன் முதல் தலைப்பில் விவாதம் செய்த கிறிஸ்தவ அறிஞர்கள், இரண்டாம் தலைப்பில் விவாதத்திற்கு வராமல் ஓட்டமெடுத்த நிகழ்வு கடந்த வாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.கடந்த ஜனவரி 21 மற்றும் 22 சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் சென்னை தி.நகரில் உள்ள சர்பிட்டி தியாகராயர் அரங்கத்தில் பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துக்கும், ஜெர்ரி தாமஸ் குழுவினருக்கும் இடையே அனல் பறந்த விவாதம் நடைபெற்றதை சென்ற வார உணர்வு இதழில் நாம்...