N சைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் பத்திர மோசடி செய்துள்ள விவகாரத்தில் பொறம்போக்குகளுக்கெல்லாம் பதில் சொல்லத் தேவையில்லை என்று கூறியிருக்கிறாரே. இதுகுறித்து தங்களின் பதில் என்ன?
- சபியுல்லாஹ், குவைத்
@ பத்திரக் கள்ளன் என அன்போடு அழைக்கப்படும் சைபுல்லா ஹசரத் அவர்கள் இவ்வாறு சொல்வது ஒன்றும் புதிய நடைமுறை அல்ல! அவர் முன்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் இருந்த போது அவர்வசமிருந்த ஆம்புலன்ஸில் ஏகப்பட்ட மோசடிகள் நடைபெறுவதாகப் பல புகார்கள் வந்தது. அதை அந்த மாவட்ட நிர்வாகம் பலமுறை விளக்கம் கேட்டும் கூட பதிலே சொல்லாமல் மவுனம் காத்தவர் தான் இந்தப் பத்திரக்கள்ளன் சைபுல்லாஹ்.
ஆனால் கடைசியில் கணக்கை ஒப்படைக்காமலேயே விலகிச் சென்றுவிட்டார் ஹசரத் பத்திரக்கள்ளன் சைபுல்லாஹ். ஒருநாள் தன்னுடைய சொந்த பந்தங்கள் சிறுபிள்ளைகள் என அனைவரையும் பிரியாணிப் பொட்டலம் தருகிறேன் வா எனக் கூட்டி வைத்து பேசிய திருகுதாளங்களில் இந்த ஆம்புலன்ஸ் பற்றி கேள்வி வரும் போது அதற்கு காசு கொடுத்தவர்கள் மட்டும் தான் கணக்குக் கேட்க வேண்டும் , வேறு யாரும் கேட்கக்கூடாது என ஜகா வாங்கினார். அந்த நிலைதான் பொறம்போக்கிற்கு பதில் சொல்ல மாட்டேன் என்று சொல்வதிலும். சரி பொறம்போக்கிற்கு பதில் சொல்ல வேண்டாம்.
ஆனால் டி.என்.டி.ஜேவைச் சேர்ந்த அப்துந் நாசரும், அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸியும் சைபுல்லாவின் வண்டவாளங்களைத் தண்டவாளம் ஏற்றும் விதமாக போட்டு கிழி கிழி என கிழித்தார்களே! அதற்கு இன்று வரை பதில் சொன்னாரா என்று கேளுங்கள். அதிகாரப்பூர்வமானவர்களுக்குத்தான் பதில் சொல்வேன் என்று ஹசரத் யாரைச் சொல்கிறார் என்றே தெரியவில்லை. நாசரும் அப்துல் ரஹ்மான் பிர்தவ்ஸியும் அதிகாரப்பூர்வமானவர்கள் இல்லையா? அல்லது அதை பகுதி வாரியாக வெளியிட்ட ஆன்லைன் பீஜே இணையதளம் அதிகாரப்பூர்வமானது இல்லையா? அதற்கு இன்றுவரைக்கும் வாய்திறக்க மறுக்கும் அசரத் சைபுல்லா, 40 லட்ச ரூபாயைப் பொதுமக்களிடம் வசூல் செய்து அதைத் தன் ஒன்றுவிட்ட பங்காளி மகன் பஷீரின் பெயரில் பதிவு செய்தது என்ன நியாயம்?
அதன்பிறகு எம்.எம்.ஜே என்ற டுபாகூர் சங்கத்தைத் துவக்கி, அதில் தன்னையே நிரந்தரத்தலைவராக ஆக்கிக் கொண்டு அதை தன் குடும்பச் சொத்தாக்கலாம் என்று நாம் கேள்வி எழுப்பினால் பொறம்போக்கிற்கு பதில் சொல்ல மாட்டாராம். தவ்ஹீதை 40 லட்சத்திற்கு விற்றவர் தான் இந்தப் பத்திரக் கள்ளன் சைபுல்லா என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
0 comments:
Post a Comment