அன்பும் பண்பும் பாசமும் அதிகம் சிந்திக்கும் திறனும் நிறைந்த அன்புச் சகோதரர் அப்துல் முஹைமீன் அவர்கள் சமீபத்தில் சுனாமி கணக்கு குறித்து ஒரு அருமையான கேள்வியைக் கேட்டு இருந்தார். அதாவது உலகறிந்த சுனாமி திருடர்களான தமுமுகவினர் இன்று வரை சுனாமி கணக்கினை மக்கள் மன்றத்தில் தாக்கல் செய்யாத நிலையிலும்,சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டித் தருகிறோம் எனச் சொல்லி விட்டு இன்று வரை அதற்கான முயற்சியில் இறங்காமலும் 67 லட்சம் ருபாய் வசூல் செய்துவிட்டு அந்தக் காசில் 37 லட்சம் ரூபாய் செலவு செய்தாதாக ஒரு டப்பா கணக்கை காட்டியும் இருக்கிறார்கள்.
அதற்கான பட்டியலையும் வெளியிடாமல் வாயால் தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அனைத்துக் கணக்குகளையும் வெளியிட்டு விட்டோம் என அவர்கள் பத்திரிகையில் முன்பு எழுதினார்கள். ஆனால் இதில் கடும் ஊழல் நடந்திருப்பதாக ததஜவினருக்கு அவர்களுக்குள்ளேயே ஒரு முக்கிய நபர் தகவல் கொடுத்ததன் அடிப்படையில் அதில் ஊழல் நடந்திருப்பதை வெட்ட வெளிச்சமாக்கி அறைகூவல் விடுத்தனர் ததஜவினர்.
அன்றைக்கு அதுசம்பந்தமாக ததஜவுக்கும் தமுமுகவுக்கும் பெரிய காகித யுத்தமே நடந்தது. இறுதியில் இரு அமைப்பும் மற்ற 5 அமைப்பினர் நடுவர்களாக இருக்கும் நடுவர் குழுவின் முன்னிலையில் தங்களது கணக்குகளை ஒப்படைக்க வேண்டும் என்றும் அதில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அதை நடுவர் குழு விசாரித்து தெளிவுபடுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் முதலில் இரு அமைப்புகளும் முதலில் உடன்பட்டன. இதிலே ஒரு வேடிக்கை என்னவென்றால் அன்றைக்கு எல்லா இயக்கங்களை விடவும் ததஜ தான் அதிகமாக எதிர்க்கப்பட்ட இயக்கமாக இருந்தது.
பீஜேவை எப்படியாவது இழிவுபடுத்தி விட வேண்டும் என்று பல சமயங்களில் துடித்துக் கொண்டிருந்த மக்களைக் கொண்ட இயக்கங்களைத் தான் ததஜ நடுவர் குழுவாக ஏற்றுக் கொண்டது.
இந்த நடுவர் குழு விசாரணையானது தமிழகம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருக்கும் பீஜேவை எதிர்க்கும் அனைத்து இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு அல்வா சாப்பிட்டது போல ஆகியது. பீஜேவை மார்க்க ரீதியாகத் தான் நம்மால் எதிர்க்க முடியவில்லை. என்ன சொன்னாலும் அதற்கு குர்ஆன் ஹதீஸ் என பதில் சொல்லி விடுகிறார். இந்த சுனாமி கணக்கில் ஊழல் நடந்திருந்தால் அதை உலகுக்கெல்லாம் சொல்லி அவர்களை இழிவுபடுத்தி இத்தோடு பீஜேவின் பிரச்சாரத்தை ஓய்த்து விடலாம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை அழித்து விடலாம் என்கிற ரீதியில் தமுமுகவினரை உத்தமர்களாக எண்ணிக் கொண்டு அவர்களை தொடர்பு கொண்டு இவர்களை விட்டு விடாதீர்கள், இதுதான் நமக்கு சரியான சந்தர்பம் என கூற ஆரம்பித்தார்கள்.
ஆனால் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக மற்ற இயக்கத்தவர்கள் எல்லாம் ததவை அழிக்க நினைத்துக் கொண்டிருக்கும் போது சுனாமி பிணங்களைக் காட்டி காட்டி வசூல் செய்து அதை நக்கி நக்கித் தின்ற தமுமுகவினருக்கு வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்தது. காரணம் அதிலே 30 லட்ச ரூபாயை மொத்தமாக ஆட்டையைப் போட்ட இந்த தமுமுகவினர் புலி வாலைப் பிடித்தது போல நன்கு வம்பிலே மாட்டிக் கொண்டோம் என்று உணர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக நடுவர் விசாரனையில் இருந்து ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தனர்.
இவர்களது இந்த செயலை அன்றைக்கு உணர்வு வார இதழ் பக்கம் பக்கமாக வெளிப்படுத்தியது. தமுமுகவை நல்ல இயக்கம் என்று நம்பியிருந்த மறுமையின் மீது பயம் கொண்டிருந்த ஏராளமான சகோதரர்கள் அதிலிருந்து வெளியே வந்தனர். பல கிளைகள் கூண்டோடு தங்களாகவே கலைந்தனர். சேலம் போன்ற மாவட்டங்களில் மாவட்டத் தலைமையே கலைந்தது. வளைகுடாக்களில் பல சகோதரர்கள் கடிதங்கள் வாயிலாகக் காரித்துப்பினர்.
அடப்பாவிகளா, சுனாமி நேரத்தில் அங்கே கரை ஒதுங்கிய பிணங்களின் காதுகளில் இருந்த தங்கத்தோடுகளை காதை அறுத்துத் திருடியவனுக்கும் , அந்தச் சுனாமி பிணங்களைக் காட்டி வசூல் செய்து அந்தக் காசைத் தின்ற இவர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை என ஊர் மக்களெல்லாம் பேச ஆரம்பித்தார்கள்.
இதனால் ஜெர்க் ஆன தமுமுகவினர் சென்னையில் ஒரு கல்யாண மண்டபத்தைப் பிடித்து அதிலே திரையைக் கட்டி அவர்களுக்கு வேண்டப்பட்ட நபர்களை மட்டும் அழைத்து புரொஜெக்டர் மூலம் இதோ அதோ என படம் போட்டுக் காட்டி விட்டு மீதி 30 லட்சம் ரூபாய் இருக்கிறதென்று கணக்குக் காட்டி இந்தக் காசை வைத்து நாகூரில் சுனாமி பாதுகாப்பு மையம் ஒன்று அமைக்கப்போகிறோம்., இனிமேல் சுனாமி வந்தால் அதிலே மக்கள் தங்கிக் கொள்ளலாம் என மத்திய மாநில அரசாங்கங்களே சிந்திக்காத ஒரு அற்புதமானத் திட்டத்தை(?) உண்டாக்கி பசி பட்டினியில் கிடந்த மக்களுக்கு உடணடி நிவாரனத்திற்கு ஏற்பாடு செய்யாமல் சுனாமி பாதுகாப்பு மையத்தை இந்த தமுமுகவினர் அமைக்கத் திட்டமிட்டதாகக் கதை விட்டனர்.
அப்படி அமைக்கப்பட்ட இடம் இப்போது நாகூரில் எங்கே இருக்கிறது? அதன் நீள அகலம் என்ன? அது இப்போது என்னவாகச் செயல்படுகிறது என்பதை நாகூரில் உங்களுக்கு நண்பர்கள் இருந்தால் கேட்டுக்கொள்ளுங்கள். இப்படியாக சுனாமி கணக்கை இன்று வரை தாக்கல் செய்யாமல் இருக்கின்றார்கள் இந்த தமுமுகவினர்.
இப்படி பழைய வரலாறு இருக்கையில் இந்த சுனாமி திருடர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து பாலியல் குற்றச்சாட்டு மோசடி குற்றச்சாட்டு நிறுபிக்கப்பட்டு தூக்கி எறியப்பட்ட அயோக்கியர்கள் சுனாமி திருடர்களுக்கு ஆதரவாக..,சமீபகாலத்தில் ஒரு கதையை கிளப்பினார்கள். அதாவது அன்றைக்கு ததஜவினரால் வசூல் செய்யப்பட்டு அதற்கு துல்லியமாக உணர்வு வார இதழில் ததஜவினர் காட்டிய கணக்கை எடுத்துக் கொண்டு, “பார்த்தீர்களா அண்ணன் ஜமாத் செய்த ஊழலை” அவர்களிடம் எச்சிப்பொருக்கும் அப்துல்முஹைமீன் என்ற அடிமடையன் கேள்வி எழுப்பினான்.
வரலாற்றை மறைக்க முயற்சிப்பதால் தான் சுனாமி திருடர்களின் துரோக வரலாறு என்ற பெயரில் இவர்களின் முகத்திரையை ஆன்லைன்பீஜேவில் இப்போது ஆதாரப்பூர்வமாக கிழி கிழி என கிழித்துக் கொண்டிருக்கிறார்.
அன்புச் சகோதரர் அப்துல் முஹைமீன் அவர்கள் இந்த வாதத்தை வைத்து அனைத்து மக்களுக்கும் உண்மையான சுனாமி திருடர்கள் யார் என்பதை வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பத்தை அமைத்துத் தந்த அன்புச் சகோதரர் அப்துல் முஹைமீன் அவர்களுக்கு நாம் மீண்டும் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்றைக்கு சுனாமி கணக்கு வழக்குகளை முழுக்க முழுக்க கையாண்டது அண்ணன் பாக்கர் என்பதால் இந்த கேள்விக்கு அண்ணன் பாக்கர் தான் பதில் அளிக்க வேண்டும் என அவர்கள் பக்கமே திருப்பி விட்டோம். அதாவது கேமிராவைச் சுமந்து சென்ற வாடகை, எடிட்டிங், ஒளிபரப்புச் செலவு ஆகியவற்றில் ஊழல் நடந்திருக்கிறது என அன்புச் சகோதரர் அப்துல் முஹைமீன் தெரிவித்ததால் அதையும் அவரே அவர்கள் தளத்தில் கிளப்பியதால் மக்களிடையே பரபரப்பு நிலவியதைத் தொடர்ந்து அந்தக் கண்க்கில் அதாவது கேமிரா ஒளிபரப்பு சம்பந்தப்பட்ட கணக்கு வழக்கில் அண்ணன் பாக்கர் அவர்கள் ஊழல் செய்ததை ஒப்புக் கொண்டார்கள் என்பதை அவர்களின் தளத்திலேயே பொய்யன் வகையறாக்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். அல்ஹம்துலில்லாஹ். அதற்காக அவர்கள் வெளியிட்டுள்ள ஆதாரம் இதோ.
ஆனால் இது போதாது. அதாவது அதையெல்லாம் சரியாக வரிக்கு வரி விளக்கமாக வெளியிட வேண்டும் என்பது தான் நம் நோக்கமே! இன்ஷா அல்லாஹ் அதையும் அவர்கள் செய்வதற்கு மக்கள் வலியுறுத்த வேண்டும். அதுமட்டுமின்றி பீஜேயும் கணக்கில் தவறு நடந்ததை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். முதலில் பொய்யன் வகையறாக்கள் ஒன்றை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
முழுக்க முழுக்க அண்ணன் பாக்கர் அவர்கள் தான் சுனாமி சம்பந்தமாக கடைசிவரை கணக்கு வழக்குகளைக் கையாண்டவர். ஆனால் இப்போது அண்ணனும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றால் அது எப்படி சரியாகும்? ரதிமீனா பஸ்ஸிலே நந்தினியுடன் பயணம் செய்தவர் அண்ணன் பாக்கர் தான் தான். அது அனைவராலும் நிருபிக்கப்பட்டு அதை அவரும் ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் ஒருவன் வந்து பீஜேயும் இந்தத் தவறை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கேட்டால் அது என்ன நியாயம்?
பாக்கர் தவறு செய்தார் அதனால் தான் அவரை இங்கிருந்து தூக்கி வீசினோம் என்று வேண்டுமானால் ஒப்புக்கொள்ளலாம். அதேபோல அண்ணன் பாக்கர் அவர்கள் எங்களின் அன்புச் சகோதரர் பாசமிகுந்த அப்துல் முஹைமீன் அவர்கள் கேட்ட அனைத்து கணக்குகளையும் நல்ல முறையில் ஒப்படைப்பீர்கள் என்று நம்புகிறோம்.
இதஜடி ஜமாத்தின் வெப்சைட்டில் அனைத்தையும் வெளியிட்டால் மிக நன்றாக இருக்கும். அதுபோல சுனாமி கணக்கில் 10 லட்சம் ரூபாயை அண்ணன் பாக்கர் அவர்கள் திருடி அதை ததஜ தணிக்கைக்குழுகையும் களவுமாகப் பிடித்து வசூல் செய்த கதையையும் சேர்த்து வெளியிட்டால் அதைப்படிக்கும் மக்களுக்கு இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். அன்புச்சகோதரர் அப்துல் முஹைமீன் அவர்கள் இதற்கு கடும் முயற்சி எடுத்து அண்ணன் பாக்கர் செய்த சுனாமி ஊழல்களை உலகுக்கு அம்பலப்படுத்த வேண்டுகிறோம்
0 comments:
Post a Comment