Monday, August 8, 2011

திடல் தொழுகைக்காக போலி ஒற்றுமை - SSU ஸைஃபுல்லா கும்பலின் கயமைத்தனம்!!



அளவற்ற அருளாளனின் திருப்பெயரால்...

                                                                                                                                                                                                                    ”மக்கள் உங்களுக்கு எதிராக திரண்டு விட்டனர் எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர் இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்! அவன் சிறந்த பொறுப்பாளன்!!” என்று அவர்கள் கூறினர்(அல்குர்ஆன் 3-173)
அன்புள்ள சகோதரர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

கடந்த 04-08-2011 வியாழன் அன்று இரவு பெருநாள் திடல் தொழுகை சம்பந்தமாக கடையநல்லூர் காவல் நிலையத்தில் வைத்து ஆய்வாளர் முன்னிலையில் அமைதிக்கான கூட்டம் நடந்தது

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக நகர டவுண் கிளையின் தலைவர் சகோதரர் அய்யூப் மற்றும் செய்தி தொடர்பாளர் சகோதரர் குறிச்சி சுலைமான் ஆகியோர் கலந்து கொண்டனர்
தவ்ஹீத் ஜமாத்திற்கு திடல் தொழுகைக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்பதற்காக முபாரக் பள்ளியின் சார்பில் செய்மாந்தரகன் சேகனாவும், மூப்பர்மாப்பிள்ளை சின்சாவும், INTJ  சார்பில் அதன் செயலாளர் அலியும், மக்தும் ஜஹான் (பெரிய) தர்ஹா டிரஸ்டி சார்பில் இஸ்மாயிலும் மற்றும் தமுமுக சார்பில் அதன் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்
       அந்த கூட்டத்தில் ” கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தான் காயிதே மில்லத் திடலில் பெருநாள் தொழுகையை நடத்தி வந்தது” என்பதை டவுண் கிளைத் தலைவர் சகோதரர் அய்யூப் அவர்கள் பத்திரிக்கை செய்திகள் மற்றும் புகைப்படங்களின் ஆதாரத்துடன் விளக்கினார்
       இதற்கு எதிராக முபாரக் சார்பில் சின்சா, திடல் தொழுகையை தவ்ஹீத் ஜமாத் நடத்தவில்லை முபாரக் பள்ளிதான் நடத்தியது பள்ளியின் தலைவர் (!) ஸைபுல்லாஹ் தான் தொழுகை நடத்தினார் என்றார்.அப்போது குறுக்கிட்ட தவ்ஹீத் ஜமாத் தலைவர், ”திடல் தொழுகை நடத்தியவர் முபாரக் பள்ளியின் தலைவர் அல்ல. முபாரக் பள்ளியின் தலைவர் எனது தகப்பனாரின் சகோதரர் தான் (இன்றைய முபாரக் பள்ளியின் தலைவர்) என்று முபாரக் பள்ளியின் பெயரை சொல்லி வயிறு வளர்க்கும் போலி ஏககத்துவ முகமூடி அணிந்த நாசக்காரர்களின் முகத்திரையை சபையோர் முன்னிலையின் கிழித்தார்(அல்ஹம்துலில்லாஹ்)
அன்புள்ள சகோதரர்களே ! இத்தனை நாளும் திடல் தொழுகையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாகத்தான் நடத்தினார்கள் என்பது நாம் நன்றாக அறிந்த விஷயம் தான். அப்படியே ஒரு வேளை முபாரக் பள்ளி நடத்தினாலும் அப்போது இவர்கள் கூறுவது போல் முபாரக் பள்ளிக்கென்று தனி ஜமாத் பெயர் கிடையாது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்
கடந்த வருடத்தில் தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக 19 கூட்டத்தினர் ஒன்று கூடியபோது அதை கடுமையாக எதிர்த்தார்கள். முபாரக் பள்ளியின் முன்பு 19 கூட்டத்தினர் சுவரொட்டியை ஒட்டியபோது அதை கிழித்தார்கள்!!! இன்னும் தர்ஹா திடலில் சகோதரர் ஃபக்கீர் முஹம்மது அல்தாபியை வைத்து பொதுக்கூட்டம் நடத்தினார்கள். மணிக்கூண்டிற்கு அருகில் சகோதரர் அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸியை வைத்து தெருமுனைபிரச்சாரம் அவர்களுக்கு எதிராக நடத்தினார்கள். இன்னும் சொல்லப்போனால் சென்ற ஹஜ் பொருநாள் அன்று எல்லோரும் பெருநாள் 17 ம் தேதி என்று அறிவித்ததார்கள் ஆனால் தவ்ஹீத் ஜமாத் அடுத்த மறுநாள் என்று அறிவித்தது. மறுநாள் தவ்ஹீத் ஜமாத் சார்பாக நடத்தப்பட்ட பெருநாள் தொழுகையில் பேசிய ஸைபுல்லாஹ் முநதியநாள் பெருநாள் தொழுதவர்களை களிசடைகள் என்று கடுமையாக சாடினார் என்பதையும் நாம் அறிவோம்.
இத்தனை காரியங்களையும் செய்தவர்கள் இன்று அந்த களிசடைகளோடு, இந்த களிசடைகளும் கைகோர்த்து கொண்டு நாங்களும் உங்களில் உள்ளவர்கள் தான் என்று ஒப்புக்கொண்டுள்ளார்கள். இதே போன்று நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மதினாவில் வாழ்ந்த முஃனாபிக்கள் செய்தாக அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்
நம்பி்க்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது நம்பிக்கை கொண்டுள்ளோம் ! எனக் கூறுகின்றனர் தமது ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது நாங்கள் உங்களை சேர்ந்தவர்களே. நாங்கள் அவர்களை கேலி செய்வோரே எனக் கூறுகின்றனர்.
அல்லாஹ்வோ அவர்களை கேலி செய்கிறான் அவர்களது அத்துமீறலில் அவர்களை தடுமாற விட்டு விடுகிறான் (அல் குர்ஆன்:2-14,15)
எனவே அன்புள்ள தவ்ஹீத் சகோதரர்களே!  திடல் தொழுகைக்காக தன்னுடைய ஈமானை அடகு வைத்த இத்தகைய கயவர்களை அடையாளம் கண்டு கொள்வோம். எப்படிப்பட்ட பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை. எது நடந்தாலும் பராவாயில்லை. நான் ஜெயிக்கவேண்டும் என்ற அகம்பாவ எண்ணத்துடன் திரியும் செய்மாந்தரகன் ஸைபுல்லாஹ் கும்பலின் ஆணவப்போக்கை அழித்தொழிக்க இன்றே சபதம் ஏற்போம் !!! இத்தகைய கயவர்களின் பொய்யான முகத்திரையை இந்த சமூகத்திற்கு எடுத்துரைப்பதை இலட்சியமாக கொள்வோம்!!! இவர் மட்டுமல்ல ஏகத்துவக் கொள்கைக்கு எதிராக எவர் வரினும் ஏகனின் துணை கொண்டு அவர்களது முகத்திரையை கிழித்தெறிவோம் ! இன்ஷா அல்லாஹ் !!!
அத்தகைய பணிகளில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் !!!


அன்புடன்
கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாத்(TNTJ) - அமீரகம்
குறிப்பு சென்ற வருடங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாகத்தான் தொழுகை நடந்தது என்பதற்கு சான்றாக ஸைபுல்லாஹ்வே தனது இமெயில் முகவரியிலிருந்து அனுப்பிய மெயில் இனைக்கப்பட்டுள்ளது. இவர்களது சுயரூபத்தை அறிந்து கொள்ளுங்கள்!!!
 


 SSU ஸைஃபுல்லாஹ் எழுதிய கடிதம்




Date: Thursday, 9 September, 2010, 10:57 AM
பெறுநர்
        உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்,
        திருநெல்வே­லி

பொருள் : நோன்புப் பெருநாள் தொழுகை திடல் சம்பந்தமாக..

உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக..!
ஐயா,
        கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக கடந்த பல ஆண்டுகளாக முஸ்லி­ம்களின் புனித நாட்களான நோன்பு மற்றும் ஹஜ்ஜப் பெருநாள் ஆகிய நாட்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்குச் சொந்தமான காயிதே மில்லத் திட­ல் பல்லாயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் ஒன்று கூடி பெருநாள் தொழுகை நடத்துவது வழக்கம்.
ஒவ்வொரு முறையும் தர்காவுக்கு சொந்தமான யானையை குறிப்பாக அந்த நாளில் மட்டும் திட­ல் கட்டி இடையூறு செய்து வருகிறார்கள். இதனால் யானைக்கு மதம் பிடித்து விடுமோ என்று திட­ல் தொழ வருபவர்கள் ஒவ்வொரு முறையும் பயந்து நடுங்குகிறார்கள்.
மேலும் யானை கழிக்கும் சிறுநீர்மலம் ஆகியவற்றால் சுற்றப்புறம் முழுவதும் துர்நாற்றம் ஏற்படுகிறது. தொழுகைக்கு வருபவர்கள் மன நிம்மதியின்றி திரும்பிச் செல்கின்றார்கள். ஆகையால் பெருநாள் தொழுகைக்காக யானையை பெருநாளுக்கு முந்திய நாளி­ருந்து பெருநாள் மதியம் வரை யானையை அப்புறப்படுத்தி வேறிடத்தில் கட்ட உத்தரவிடுமாறு பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
        இது சம்பந்தமாக காவல்துறைக்கும் வனத்துறைக்கும் பல முறை மனுச் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
        மேலும் இந்த ஆண்டு அரசு ஒப்பந்தக்காரர் ஒருவர் வேண்டும் என்றே கற்கள் மற்றும் மணல்களை குவியல் குவியலாக திட­ல் குவித்து வைத்துள்ளார். அவரிடம் பல முறை தெரிவித்தும் இதுவரை கல்­ மற்றும் மணல்கள் அகற்றப்படவில்லை. இது சம்பந்தமாக நகராட்சி ஆணையாளரிடமும் மனுக் கொடுத்துள்ளோம். தாங்கள் தொழுகைத் திடலை பார்வையிட்டு அதற்கான ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி.                             
இவண்,
செயலாளர்

08.09.2010 (புதன்) மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் இந்த மனுவை கொடுப்பதற்காக டிஎன்டிஜே மற்றும் மஸ்ஜிதுல் முபாரக் நிர்வாகிகள் தலைமையில் காயிதே மில்லத் திட­ல் மக்கள் பெருந்திரளாகக் கூடினர். பெருந்திரளான மக்களைக் கண்டு அங்கு வந்த கடையநல்லூர் ஆய்வாளர் அவர்களிடமும் இந்த மனு அளிக்கப்பட்டது. அவர் தக்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்ததார். மேலும் சம்பவ இடத்தை பார்வையிட வந்த வருவாய் ஆய்வாளர் அவர்களிடமும் நிலைமை எடுத்துச் சொல்லப்பட்டது. பிறகு இந்த மனுவை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் கொடுப்பதற்காக மெயின் பஜார் வழியாக சேனைத் தலைவர் மண்டபத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களைச் சந்தித்து மனுவைக் கொடுத்தனர். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார்






-
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் தான் திடல் தொழுகை நடைபெற்றது என்பதற்கான பத்திரிக்கை செய்தி ஆதாரங்கள் இதோ உங்களின் பார்வைக்கு...!  இந்த செய்தியை பத்திரிக்கைகளுக்கு வழங்கியதும் இந்த போலி ஏகத்துவக் கும்பல் தான்.இதை இப்போது மறுக்கப் போகிறார்களா?!
                                    தமிழ்முரசு நாளிதழ் (10.09.2010)

                                      தினகரன் நாளிதழ் (11.09.2011)
                                                                                                        
                                       தினமணி நாளிதழ் (11.09.2011)
        
                                 தின சூரியன் நாளிதழ் (11.09.11)
                                தினத்தந்தி நாளிதழ்(11.09.2011)


0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons