Wednesday, August 3, 2011

இந்திய பிறை என்ன ஆச்சி? காணமல் போன பொய்யன் கூட்டம்


சென்ற ஹஜ்ஜூப் பெருநாள் தமிழகத்தில் பிறை பார்க்கப்படாததால் முந்தைய மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்யப்பட்டு ஜூலை 18 ஆம் நாள் ஹஜ்ஜூப் பெருநாள் கொண்டாடப்பட்டது. இது சம்பந்தமாக டவுன் ஹாஜியை ததஜ நிர்வாகிகள் கேட்ட போது அவர் மாலேகானில் பிறை பார்த்த விசயத்தைச் சொன்னார். அது தவறு என்று அவருக்கு உணர வைத்த பிறகு அடுத்த வருடம் சரி செய்து கொள்வோம் என்று சொல்லிவிட்டார்.
ஆனால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை ஒன்று சேர்த்து பீஜேவை எதிர்ப்பதை மட்டுமே பைலாவாகக் கொண்டு இயங்கி வரும் இதஜடியினர் சென்ற ஹஜ்ஜூப் பெருநாளைக்கு மாலேகான் பிறையை

வைத்து இந்தியா முழுவதும் எங்கே பிறை தெரிந்தாலும் நாங்கள் அதை ஏற்றுக் கொள்வொம் என்று சொல்லும் இவர்கள் இன்றைக்கு தங்கள் முகங்களை சேலை கொண்டு மூடிக்கொண்டு முடங்கிக் கிடக்கிறார்கள். அன்றைக்கு அண்ணனை எதிர்க்க வேண்டும் என்கிற விசமத்தனத்தை உள்ளே வைத்துக் கொண்டு வெளியே குர்ஆன்ஹதீஸ் அடிப்படையில் அப்படி இப்படி என்று மொம்மது மைதீனை வைத்து ஒரு மணி நேர பிறை விளக்கம் கொடுத்த இந்த பொய்யர்கள் இன்றைக்கு எந்த மூலையில் முடங்கிக் கிடக்கிறார்கள் என்று தெரியவில்லை. பீஜேவை எதிர்ப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற குணம் கொண்ட இந்த அயோக்கியர்களின் சாயம் இந்த வருடம் வெளுத்து விட்டது.

இந்த கழிவுகள் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் சென்ற ஹஜ்ஜூப் பெருநாளைக்கு செய்த சித்து விளையாட்டுக்கள் இந்த வருடம் அவர்களால் செய்ய முடியவில்லை. பீஜேவை எதிர்ப்பதற்காக இவர்கள் இணை வைப்புக் காரியத்தைக் கூட சரிதான் என்று சொல்வார்கள்.

இன்றைக்கு (01/08/2011) கேரளாவிலும்,கர்னாடகாவிலும் நேற்றே பிறை பார்க்கப்பட்டு இன்று ரமலான் 1 என தீர்மானிக்கப்பட்டு நோன்பு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியா முழுவதும் எங்கு பிறை பார்த்தாலும் அதை நாங்கள் ஏற்ற்றுக் கொள்வோம் என்று போன வருடம் சப்பைக் கட்டு கட்டிய இந்த சப்பைகள் இன்றைக்கு அதைப் பற்றி பேச மறுக்கிறார்கள். இதுகுறித்த அவர்களின் நிலைபாட்டை விளக்கினால் நன்றாக இருக்கும்.
பீஜேவை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தங்களின் மனோ இச்சைப்படி மார்க்கத்தை வளைக்கும் இந்த அயோக்கியர்களையும் நம்பி சொற்ப சிலர் செல்கிறார்களே என்று நினைக்கும் போது அவர்களின் நிலையை நினைத்து பரிதாபப்பட வேண்டியிருக்கிறது.
இவர்கள் இந்த விசயத்திற்கு பதில் என்ற பெயரில் எப்படி எப்படி வியாக்கியானம் தருவார்கள்?

பீஜேவும் ஒரு காலத்தில் பல நிலையில் இருந்து தான் இப்போது தமிழ்நாடு என்ற நிலைபாடை எடுத்திருக்கிறார். அது போலத்தான் நாங்களும் என்று சொன்னாலும் சொல்வார்கள். பீஜேவும் ஒரு காலத்தில் ஒவ்வொரு நிலைபாட்டில் இருந்தது உண்மைதான். பிறகு தமிழ்நாடு என்ற அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது. இப்போது குத்தம் குறை சொல்பவர்கள் அன்றைக்கு இங்கே இருக்கும் போது அதைப்பற்றி வாய் திறக்கவில்லை. இப்போது வெளியே போய் நின்று கொண்டு தமிழகப் பிறையை ஏற்றுக்கொள்வது தவறு என்றும்இந்தியப்பிறை தான் சரி என்று டிக்ளேர் செய்துவிட்டார்கள். இப்போது இவர்களின் நிலை என்ன?

அந்த பிறை விசயம் ஹஜ் பெருநாளைக்கு மட்டும் தான் பொருந்தும்இது நோன்புப் பெருநாள் என்று சொல்லியும் தப்பித்துக் கொள்ளலாம்.

காரைக்குடி விசயத்திலும் வேலூர் கள்ள ரசீது விசயத்திலும் மரண மவுனம் காத்தது போல இதற்கும் காக்கலாம்.

என்ன செய்யப்போகிறது பொய்யனின் அடிவருடிகளும்ஜால்ராக்களும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்


- திருச்சி மூஸா

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons