Monday, October 29, 2012

விளம்பரம் செய்பவர்கள் சிந்திப்பார்களா?

முல்லைப் பெரியாறு விஷயத்தில் மக்களைத் தூண்டி விட்டு மாநில அரசுகள் இரண்டும் வேடிக்கைப் பார்த்தன.

அதே போல் கர்நாடக காவிரி நீருக்காக மக்களைத் தூண்டிவிட்டு அரசுகளை வேடிக்கைப் பார்க்கச் செய்ய கூட்டணிக் கட்சிகள் போராட்டம் என்ற பெயரில் மக்கள் தலையில் மிளாகாய் அரைக்க ஆரம்பித்துள்ளன. 

இது போன்ற போராட்டங்களை கட்சி விளம்பரங்களுக்காகத் தான் செய்கின்றன என்று பொது மக்களும், மக்களின் கோபம் நம்மீது பாயாமல் இருந
்தால் சரி என்ற நிலையில் தமிழக அரசும் உள்ளன.

இவர்கள் உண்மையில் போராட்டம் நடத்த வேண்டும் என்றால், தமிழக அரசுக்கு எதிராகத் தான் போராட்டம் நடத்த வேண்டும். தமிழக அரசுக்கு எதிராக மக்கள் கொதித்து எழுந்து விடுவார்கள் என்ற பயத்தால் "தானேப் புயல் புகழ்" போன்ற ஜால்ராக் கட்சிகளை விட்டு கர்நாடகாவிற்கு கர்நாடகாவிற்கு எதிராகவும் கூடங்குள அணு உலைக்கு எதிராகவும் போராட்டம் நடத்தி தமிழக அரசு மக்களை திசை திருப்புவதாகவே அமைகிறது.

தேர்தல் வாக்குறுதியாக சட்டசபையில் ஜெயலலிதா கொடுத்த வாக்கைக் காப்பாற்றாமல் மின்சாரத்திற்கு குழு அமைப்பதும், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போடுவதுமாக மக்களை கண் துடைப்பு செய்வதை மக்கள் உணர்ந்துள்ளனர். வழக்கு போட்டு மக்களுக்கு சாதகமாக நடந்த வழக்குகளை பட்டியல் போட்டு காட்ட இயலுமா? ஜெயலலிதா சொத்து சேர்த்த வழக்கு எத்தனை வருடங்களாக இழுத்தடிக்கப்படுகிறது...பாபர் மசூதி நியாயத் தீர்ப்புக்காக அமைக்கப்பட்ட லிபரகுஆன் குழு என்ன ஆனது, அது சம்பந்தமாக போட்ட வழக்கு இன்னும் எத்தனை வருடங்களுக்கு இழுத்தடிப்பார்கள் என்ற நிலை தமிழக மக்களுக்குத் தெரியாதா?

வழக்குப் போட்டு மின்சாரத்தையோ கர்நாடகாவில் இருந்து தண்ணீரையோ பெற்று விட முடியுமா? ஆக, இந்தப் போராட்டங்கள் தங்கள் கட்சிகளை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கும் முதலாளி போடும் எலும்புத் துண்டு ஈரம் காயும் வரை குரைத்து விட்டு அடங்கிப்போகும் கூட்டமாகத் தான் மக்கள் பார்வைக்கு காட்சியளிக்கிறது.

இவர்களுக்கு ஆதரவளிப்பது போல் விளம்பரம் செய்பவர்கள் சிந்திப்பார்களா?

Tuesday, October 23, 2012

எதனை வேணாலும் திறப்போம்



சமுதாயத்தின் கலங்கரை விளக்கமாம் தமுமுக மற்றும் மம கட்சியின் இரண்டே இரண்டு கண்னே கண்னு 

வேட்பாளர்களில் ஒருவரான அஸ்லம் பாஷா தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டிய அங்கன்வாடியை பூஜை 

செய்து திறந்து வைப்பதை தான் நீங்கள் பார்க்கின்றீர்கள். அல்லாஹ்விற்க்கு இனைவைத்து தான் இதை செய்ய 

வேண்
டுமா ?? இஸ்லாத்தின் ஆணிவேரான தவ்ஹீதை காப்பாற்றி இந்த நிகழ்ச்சியை செய்ய இயலாதா என்ன ?? 





மறுமையை மறந்து இன்மை வாழ்விற்க்காக இ
ஸ்லாத்தை இழக்கும் இவர்களை தானே தமுமுக தொண்டர்கள் 

சமுதாயத்தின் கலங்கரை விளக்கம் என்று நம்புகின்றார்கள்.


கேட்டால் அனைத்து சமுதாய மக்களையும் திருப்திபடுத்த என்று கூறுவார்கள். அனைத்து சமுதாய மக்களை 

திருப்திபடுத்த இஸ்லாத்தை இலக்கலாம என்று கேள்வி வைத்தால். பூஜை நடக்கும் போது அவர் அங்கே இல்லை 

இங்கே இல்லை என்று கதை கட்டுவார்கள். எப்படியோ புதிய அரசியல் படைக்க போகின்றோம் என்று களத்தில் 

குதித்த இவர்களும் சக்கடையில் தான் குதித்துள்ளார்கள் என்பதை இவர்களின் ஒரு ஒரு நிகழ்வும் செயலும் 

முஸ்லிம் மக்களுக்கு நிறுபித்து கொண்டு தான் இருக்கின்றது. 

Monday, October 22, 2012

இஸ்லாத்தை நிலை நாட்டும் போர் வாள்கள்


மார்க்கத்தில் பிறந்த நாள் கொண்டாடுவது தடுக்கப்பட்டுள்ளது என்பதற்கு முதல் காரணம் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் என்பது யூத கிறிஸ்தவ வழிமுறை. அவர்கள் மூலம் வழி வழியாக வந்தது தான் இந்த கொண்டாட்டம் அதன் வழி தோன்றல் என்ன என்பதை உணராத இன்றைய முஸ்லிம்கள், அதை செய்தால் என்ன தவறு என்று கேட்டுக்கொண்டு கொண்டாடி வருகிறார்கள்.
பிறந்த நாள் என்பது நபியின் காலத்திலும் இருந்த ஒரு நிகழ்வு தான். இது கொண்டாடப்பட வேண்டிய ஒரு காரியமாக இருந்திருந்தால் அதை முதலில் நபி (ஸல்) அவர்கள் செய்திருப்பார்கள் அல்லது செய்ய சொல்லியிருப்பார்கள் அல்லது சஹாபாக்கள் செய்ததை அங்கீகரிதிருப்பார்கள்.

இதில் எதையும் நபி (ஸல்) அவர்கள் செய்யாததிலிருந்து அது முழுக்க முழுக்க யூத நசாராக்களின் கலாசாரம் என்பதை அறிய முடிகிறது. ஈசா நபி காலம் தொட்டே இந்த பிறந்த நாள் கலாசாரம் யூத கிறிஸ்தவர்களிடையே இருந்து வந்துள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க, இன்னும் இரண்டு காரணங்களால் பிறந்த நாள் கொண்டாடுவது தவறு. 

ஒன்று , அது ஒரு மூட நம்பிக்கை. நீ இன்று பிறந்ததால் உனக்கு வாழ்த்துக்கள் என்று சொல்வதில் அறிவுக்கு பொருத்தமான எந்த வாதமும் இல்லை ! அவர் பிறந்து முப்பது வருடங்கள் ஆகியிருக்கும். அவர் பிறந்த அந்த குறிப்பிட்ட நாளில் வாழ்த்து சொன்னால் தான் அதில் அர்த்தம் இருக்கிறதே தவிர, இதன் பிறகு இந்த தேதி இதற்கு பிறகு இந்த மாதம் என்று நாமே ஒரு காலண்டரை அமைத்து வைத்துக்கொண்டு, இதோ நீ பிறந்த தேதி மீண்டும் வந்து விட்டது, ஆகவே உனக்கு வாழ்த்துக்கள் என்று சொன்னால் அது ஒரு மூட நம்பிக்கை அல்லாமல் வேறென்ன??

தேதியும் மாதமும் ஒத்து போய் இருப்பதால் வாழ்த்து சொல்கிறோம் என்று சொல்பவர்கள் வருடம் ஒத்து போகவில்லை என்பதை சிந்திக்கவில்லை ! 
வருடம் ஒத்து போகவில்லை என்றாலும் பரவாயில்லை, தேதியும் மாதமும் ஒத்து போய் விட்டதல்லவா, ஆகவே கொண்டாடலாம் என்று சொல்பவர்கள், வருடத்தை விட்டு விட்டு மாதத்தையும் தேதியையும் வைத்து பிறந்த நாள் கொண்டாடுபவர்கள்,  மாதத்தை விட்டு விட்டு, ஒவ்வொரு மாதமும் ஒத்துப்போக கூடிய  தேதியில் பிறந்த நாள் கொண்டாடுவார்களா? அல்லது, தேதியும் மாதமும் ஒத்து போக வேண்டும் என்பது போல பிறந்த கிழமையும் ஒத்து போக வேண்டும் என்பதற்காக வாரா வாரம் கொண்டாடுவார்களா?
இதிலெல்லாம் அறிவுடன் செயல்படுவார்களாம்  !, இப்படி கொண்டாடுவதெல்லாம் மூட நம்பிக்கையாம் !!!! என்னே இவர்களது அறிவு.


பிறந்த நாள் கொண்டாடுவது தவறு என்பதற்கான அடுத்த காரணம், அது ஒரு போலி கொண்டாட்டம். வாழ்த்துக்கள் என்றோ happy birthday என்றோ சொல்வதில் யாருமே உண்மையாக இருக்கவில்லை. 
காரணம், ஒரு குழந்தை பிறந்த அந்த ஒரு நாள் தான் ஒவ்வொரு மனிதனுக்கும் மகிழ்ச்சியே தவிர, அதன் பிறகு வரக்கூடிய எந்த பிறந்த நாளும் சம்மந்தப்பட்டவனுக்கு மகிழ்ச்சியை தராது என்பது தான் யதார்த்தம் ! 
நாற்ப்பது வயதில் இருந்து நாற்ப்பது ஒன்றாவது பிறந்த நாளை ஒருவன் அடைகிறான் என்றால் ஒரு வயது அவனுக்கு அதிகமாகியுள்ளது என்று பொருள். 
வயது அதிகமாவதை எந்த மனிதனும் கவலையோடு தான் எதிர் கொள்வானே தவிர, வயது அதிகரிப்பது உலகில் எந்த மனிதனுக்கும் ஆனந்தத்தை தராது. மேலும், ஒரு வருடம் அதிகமாகியுள்ளது என்றால் மரணம் இன்னும் அருகில் வந்து விட்டது என்கிற சாதாரண உண்மையும் இதில் அடங்கி உள்ளது. உலகில் வாழக்கூடிய எவருமே மரணத்தை விரும்புபவர்களும் அல்லர் !
ஆக, எந்த வகையிலும் பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது அறிவுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்றேயல்ல !!
சிந்திக்கிற அறிவு பெறாத மிருகங்கள் இது போன்ற மூட நம்பிக்கையில் இல்லை, சிந்திக்கிற அறிவு பெற்ற மனிதன் மூட நம்பிக்கையில் இருக்கிறான் !!

Thursday, October 18, 2012

அமைதி பூங்காவாக இருந்த கிளியனூர் இன்று கலவர பூமியாக ......


 





இடையில் புகுந்து கலவரத்தை தூண்டிவிட்டதாலும். அமைதி பூங்காவாக இருந்த கிளியனூர் இன்று கலவர பூமியாக ......

இனைய தளவாசகர்களை மீண்டும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைந்தவனாக தொடர்வதில் பெருமை அடைகிறேன் அணைத்து வாசகர்களுக்கும் எங்கள் குழு சார்பாக தியாக பெருநாள் வாழ்த்துக்கள்

சில நிகழ்வுகள் நம்மை தொடர்ந்து அதிர்ச்சி அடையவைத்துகொண்டு இருக்கின்றன நமக்குள் புதிய தீய சக்திகள் நமக்குள் புகுந்து கலவ
ரங்களை ஏற்படுத்தி தங்கள் வளர்ச்சியை ஆரம்பிப்பதாக நினைத்து சமுதாயத்தையும் அவர்களும் படுகுழியில் விழுகின்றனர்

இரண்டு நிகழ்வுகள்வேதனைக்குரிதாக ஒன்று பெருநாள் அன்று நடந்த புங்கனூரில் நடந்த கத்திகுத்து சம்பவம் அடுத்ததாக கிளியனூரில் நடந்த நிர்வாகியின் அறியாமையாலும் SDPI யின் இடையில் புகுந்து கலவரத்தை தூண்டிவிட்டதாலும். அமைதி பூங்காவாக இருந்த கிளியனூர் இன்று கலவர பூமியாக காட்சி அளித்து கொண்டுயருகிறது இதற்கு யார் காரணம் இவர்கள் அனுமதிக்காததால் இன்று இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் பாசிச சக்திகள் செய்யும் வேளைகளில் SDPI செய்து கொண்டு வருவது வேதனையான விஷயம் சான்றுக்கு வேண்டுமானால் சென்னை, திண்டுக்கல், முத்துப்பேட்டை இன்னும் பல ஊர்களில் நடப்பதை அறிந்திருப்பீர்கள்.

பாஷிச சக்திகள் நமக்கு உள்ளே புகுந்தால் நாம் தேரிந்துகொல்லலாம் ஆனால் இவர்கள் நம்மில் ஒருவராக இருந்து இங்கு அவர்களை பற்றி தரக்குறைவாக பேசி ஒருதரப்பிற்கு ஆதரவாக பேசுவார்கள் பின்னர் அவர்களும் சென்று உங்களை குடிகாரர்கள் என்று எறியும்நெருப்பில் எண்ணையை ஊட்றி பத்தவைப்பதுபோல் பேசி கலவரத்தை தூண்டிவிட்டு வேடிக்கை மற்றும் பார்க்காமல் அதை அணைப்பது போல் நடித்து இளைங்கர்களை கவற செய்வார்கள் இது இவர்கள் கையாலும் முறை இரண்டாவதாக ரெண்டன்கட்ட இளைஞர்களை மூளைச்சலவை செய்து இவர்கள் இல்லையன்றால் இந்தியாவில் ஏன் கொஞ்சம் ஏமாந்தாள் உலகதில்கூட இஸ்லாம் அழிந்துவிடும் நாம்தான் காப்பாற்ற போகிறோம் என்ற மாயையை நம்பிய இளைஞர்கள் ஏமாறுகிறார்கள்.

கிளியனூரில் சகிறுதீன் என்பவரின் மூன்றாவது குழந்தை டெங்கு காய்ச்சளால் இறந்து விடுகிறது அந்தக்குழந்தையை மையவாடியில் அடக்கம் செய்ய நிர்வாகத்திடம் அனுமதி கேக்கின்றனர் ஆனால் நிர்வாகதினர் நாங்கள் தான் எங்கள் இமாமை வைத்துதான் அடக்கம் செய்வோம் இல்லை என்றால் மைய வாடியில் இடம் கிடையாது என்று வீம்பு பிடிகின்றனர் இந்த நிலைக்கு காரணத்தை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

ஆறுமாதத்திற்கு முன்பு ஊர் விலக்கம் செய்த எடக்குடியார் வீட்டு தமீம் அவர்களின் தாயார் இறந்த போது ஊர் நிர்வாகம் எதிர்பாராத விதமாக மையத் செய்தியை பள்ளிவாசலில் அறிவித்தும் அவர்களாகவே எல்லா ஏர்பாடும் செய்தது வியக்கவைத்தது ஆனால் TNTJ நிர்வாகத்திடம் பலமுறை ஜனாசா தொழுகை சம்பந்தமாக அனுமதி வாங்கி விட்டீர்களா என்று அவகளிடம் சொல்லி கொண்டு இருதேன்

நானும் அனுமதி வாங்கிவிட்டார்கள் என்ற என்னத்தில் மைய்யத்தை பள்ளிவாசலுக்கு தூக்கி சென்றோம் தொலுகை பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க இப்போதுள்ள நிர்வாகம்தான் அப்படி இருந்தான் அங்கேயே தொழுகையை வைத்துவிட்டு பின்னர் அடக்கம் செய்ய வேண்டியதுதானே என்று கூற TNTJ சேர்ந்த்வர்கள் தங்கள் மீது தவறு இருந்ததால் ஜமாஅத் இமாம்மை பின்பற்றி தொழாமல் சென்று விடுகின்றனர் அன்று சொன்ன அந்த வார்த்தையை இந்த ஜமாஅத் நிர்வாகிகள் எப்படி மறந்தார்கள் என்று இறைவனுக்கு தான் தெரியும்.

ஆனால் TNTJ நிர்வாகத்தினர் முதலில் ஜமாஅத் சொன்னதை நம்பி அடக்கம் இடம் தருவார்கள் என நம்பி காலையில் இருந்து மாலை 4.00 மணி வரை காத்திருந்து ஜமாஅத்திளிருது அனுமதி கிடைக்கததால் காவல்துரையை நம்பி ஏமாந்து போகின்றனர் இது சம்பந்தமாக இதற்கு முன்னர் வந்த இரண்டு பதிவுகளில் விளக்கமாக விவரித்துள்ளேன் நீங்களும் படித்திரிப்பீர்கள் சில உண்மைகலளை பொதுநலம்கருதி சொல்லாமல் மறைத்து இருந்தேன் ஆனால் தேவை இல்லாமல் என்னை வழக்கில் சேர்த்து ஆனந்த பட்டு கொண்டு இருத்த நிர்வாகிகள் தலைமரைவாகிவிட்டனாறாம் ஏன் அவர்கள் நியாயமாக நடந்தவர்கள்தானே ஏன் தலைமரைவாகவேண்டும் நினைத்தால்...?

இந்த குழந்தை இறந்தப்பின் நமக்கு தகவல் வந்த உடன் முத்தவில்லி சபீர்ரிடம் TNTJ காரர்கள் பள்ளிவாசலில் தொழுகை வைக்க உரிமை கேக்கவில்லை மைய வடியில்தான் உரிமை கேட்கிறார்கள் நீங்கள் அனுமதித்தால் பிரச்னை இல்லாமல் அடக்கம் செய்துவிட்டு சென்று விடுவார்கள் என்று கூற முத்தவல்லி கோபமாக ஆது சுடுகாட என்று கோபமாக பேசினார்

அதை எப்பொழுதும் ஏட்டிக்குபோட்டியாக பேசுவது வழக்கம் என்ற முறையில் அவருடன் மயிலாடுதுறை சென்றுவிட்டேன் பின்னர் மதியம் இருவரும் சேர்ந்தேவந்தோம் அப்போதும் நான் எடுத்துக்கூறினேன் அவர்கருத்திலிருந்து பின்வாங்குவதாக தெரியவில்லை நான் அவரிடம் இந்த விஷியத்தில் வீம்புபிடிக்காதீர்கள் கடுமையான விளைவு கலை சந்திக்க போகிறீர்கள் என்று சோல்லிவிட்டு வந்து விட்டேன். இதற்க்கு கிடையில் கிளியனூர் கருப்பாடு சிக்கந்தர் தன்னால் ஆன நால்ளென்ன முயற்சியாக சிறுவர்களிடம் தனது வில்லங்கத்தை ஆறம்பித்து வைக்கிறார்

அசர் பாங்கு சொன்னபிறகு ஊர் சங்கு அலறத்தொடங்குகிறது. வீட்டில் இருந்த நான் பிறந்த குழந்தையை பார்க்க சென்றேன் ஆனால் அங்குசுமார் முப்பது நபர்கள் நின்றுகொண்டு இருந்தனர் நான் ஏன் ? என்று கேட்க்க காவல்துறை வரவில்லை வருகிறேன் வருகிறேன் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருந்தனர் வரவில்லையன எதிர் பார்த்து இருந்தனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த காவல் ஆய்வாளர் ஒரு உதவி ஆய்வளர் sp பிரிவு போலிஸ் மகேந்திரன் மூவரும் வந்து tntj நிர்வாகியிடம் வந்து மூன்று நபர்கள் வாருங்கள் என்று கூப்பிட்டனர்

அங்கு கிளியனூர்கிளை நிர்வாகிகள் பாரூக், பத்தகுள்ளா மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் புறப்பட்ட போது நான் கூறினேன் உள்ளூர் நிர்வாகிகள் மட்டும் போங்கள் என்று சொல்ல காவல்துறையினர் வலுக்கட்டாயமாக என்னை அழைத்ததால் நான் சென்றேன் அப்பொழுது எங்கலிடம் பேச்சுவார்த்தைக்கு வந்த நிர்வாகி ஹாலித் நாங்கள்தான் தொளுகைவைப்போம் நாங்கள்தான் அடக்கம்செய்வோம் என்று கூறிய உடன் காவல்துறையினருக்கு ஒன்றுமே புரியவில்லை ஜமாத்தினர் தான் அடக்க ஒப்புகொகிரார்களே ஏன் இவர்கள் வீம்பு பிடிக்கிறார்கள் என்று செல்லவும் செய்தனர் உடனடியாக நான் ஹாலிதிடம் அவர்கள் பள்ளியில் தொழுகை சம்பந்தமாக பேசவில்லை’ மையவாடியில் அவர்குளுகுள்ள உரிமையை கேட்க்கின்றனர் என்னமோ அவரது சொந்தமான பட்டா நிலம்போல அனுமதிக்க மாட்டோம் .என்று கண்டிப்பாக கூற நான் பாருக்,ப்த்தகுல்லா இருவரிடம் அவர்கள் முடிவை சொல்லிவிட்டனர்.



நீங்கள் முடிவேடுத்துகொளுங்கள் என்று சொல்லிவிட்டேன். சிறிது நேரத்தில் குழந்தையைத்தூக்கிக்கொண்டு வர பள்ளிவாசல் தெருவில் தடுப்புகளை ஏர்படுத்தி அரண்போல் சிகந்தராலும் sdpi மாவட்ட நிர்வகிகளால் நின்ற சிறுவர்களை கிளியனூர் வாசிகளுக்கு தெரியாது

அவர்கள் பெயர்களை விடியோவில்பார்த்து அதிர்ச்சி அடைந்ததால் இவர்களை நீங்களே தெரிந்துக்கொள்ளுங்கள் நிசார்(காரைக்காலை சேர்த்தவர் இவரது தகப்பனார் டீ கடை வைத்துள்ளார்) சிராஜ் (இவர் அடியக்கமங்களம்), ஹிதார் (ஆட்டுகாரர்வீட்டு ரிலா மச்சான்) ஜாபிர் (ஜூனிதாவின் இரண்டாவது மகன்) ரிள்வான் (ட்ரைலர் ராஜ்), முபீஸ் (வல்லம்), அப்துல் ரவுப் (வல்லம்) , சிராஜ் (வல்லம்), தௌபீக் (தஜிதீன் மகன்), கட்லி (இரண்டாவது மகன்) அபுல்ஹசன் பெயரை காப்பார்ட போகும் மகள் வழி பேரன்கள் பாக்கியை விடியோவில் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.



இந்தநிகழ்ச்சி நடந்துக்கொண்டு இருக்கும் போது SDPI யை சேர்த்த தாரிக் (சங்கை) ரபி (அடியக்கமங்களம்) சபிக் இவர்கள் TNTJ மாவட்ட நிர்வாகிகளிடம் நல்ல்வர்கலைபோல வந்து பெசிகொண்டிருகுபோது ஜகாபர் சாதிக் உங்கள் இயக்கத்தை சேர்தவர்கள்தானே தடுத்துக்கொண்டு இருக்கிறார்கள் அவர்களிடம் சொல்லலாம் அல்லவா என்று கேட்க யார் என்றவுடன் ரவுப்,சிராஜ் என்றுநான் சொன்னவுடன்

என்மேல் தேவையில்லாமல் பாயத்தொடங்கினர் நான் ஓரமாக நின்றுகொண்டிருந்தேன் சிறிது நேரத்தில் சமாதனம் பேச சென்ற sdpi சேர்ந்த தாரிக் அங்குள்ள உங்களை தவ்ஹீத் காரன் நீங்கள் குடித்திருபதாகவும் தவறான தகவலை சொல்லி இளைஞர்களிடம் தவறான தகவலை சொல்லி வுசுபேத்துகின்றனர் அவர்களிடம் நம் டார்கெட் இர்பானும்,ரியாசும் இவர்கள் இருவரையும் ஒலித்துகட்டுங்கள் என்று இவர் சொன்னதை எங்கள் ஊரை சேர்ந்த தலித் சகோதரர் இருவர் கையை பிடித்து இழுத்து செல்கின்றனர் ஆனால் நான் செல்லவில்லை.

சிறிது நேர்த்தில் காவல்துறை சேர்ந்த ஆய்வாளர் சாமிநாதன் அங்கு வர ஐந்து நபர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்துசெல்கிறார் ஆனால் ஜமாஅத் தரப்பில் ஐம்பதுக்கும் மேற்படோர் இருந்ததால் பேச முடியவில்லை

இந்த நேரத்தில் அங்கு நின்று கொண்டிருந்த sdpiஆஷிக் இக்பாலை பார்த்து கேவலமாக பேசி காரி உமிழ்கிறார்...ஏன் என்று இவர் கேட்டதற்கு இக்பாலை ஓங்கி முகத்தில் குத்து விட அந்த குத்து புருவத்திற்கு மேல் விழுந்ததால் இக்பாலுக்கு ரத்தம் கொட்ட ஆரம்பிக்கிறது .,இதை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த sdpiயினர் தவறான தகவலை ஆஷிக்கை TNTJகாரன் அடித்து விட்டன இந்த தகவலை பரப்பி விட்டு TNTJகாரர்களை அடித்து விரட்டுகிறார்கள்..

.அவர்களிடம் கையில் கம்புகள் கூட கிடையாது காரணம் அவர்கள் தகறாரு செய்ய வரவில்லை ஜனசாவை அடக்கம் செய்ய வந்தவர்கள் தானே

.,சிறுவர்கள் கையில் கம்புடன் கொலை வெறியுடன் ஓடியதை நினைத்தால் என்னால் ஒரு உயிர் பல உயிரை பலி குடுத்திருக்கும் ஆனால் TNTJசஹோதரர்கள் ஓடியதால் உயிர் பிழைத்தார்கள் என்று சொல்ல வேண்டும்

அந்த அளவுக்கு இளைஞர்களை பலி வாங்க மாற்றிய பெருமை சஹோதரர் சிக்கந்தருக்கும் SDPI இயக்கத்திற்கும் நன்றி சொல்ல நாம் அனைவரும் கடமை பட்டிறிக்கிறோம் ..

,இதில் குறிப்பாக சிலரை நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும் நிதானத்தில் இருந்த P.P.M.ஜகபர் அலி K.P.S.ஷேய்க் அலாவுதீன் ,மாப்பிள்ளை சலஹுதீன் தலை கீழாக நின்ற ஆர்வ கோலாறு அபுசாலி ,அடிங்கடா என்று ஆர்வமூட்டி களமிரங்கிய ஹாலித் இவர்களையும் கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும்...இதற்கிடையில் TNTJவினர் அங்கு யாரும் இல்லாததால் குழந்தையை வைத்து கொண்டிருந்த ஹாஜா நஜிமுதீனிடமிருந்து குழந்தையை பிடிங்கி கொண்டு SDPI சேர்ந்த தாரிக் பள்ளிவாசலை நோக்கி வெற்றி நடை போடுகிறார்



.,என்ன நடக்கிறது என்று தெரியாத ஹாஜா நஜிமுதீன் சுதாரிப்பதற்குள் காவல் துறையும் உடந்தையாக இருக்க பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடை பெருகிறது

,குழந்தைக்கு உரியவர் அனுமதி இல்லாமல் களவாடி தொழுகை வைத்தது கிளியனூர் ஜமாத்தாக தான் இருக்கும்...இதற்கு பிறகு அடக்கம் செய்யும் பொழுது ஹாஜாவை காவல் துறை மிரட்டி அழைத்து வந்ததாக தெரிகிறது .

.,மைய வாடியில் அடக்கம் செய்யும் பொழுது SDPIசேர்ந்த தாரிக் புகைப்படம் எடுத்தாராம் இதைக்கூட இளைஞர்கள் கண்டித்தார்கலாம் இளைஞர்கலே எதற்காக இந்த உரிமை போராட்டம் நீங்கள் நடந்து கொண்டதின் விளைவு கிளியநூரின் மேல் உள்ள நன் மதிப்பை கெட யார் காரணம் /

அசம்பாவிதம் எதாவது நடந்திருந்தால் அனைத்து இளைஞர்களுக்கும் சிறைச்சாலை அல்லவா கல்லூரி ,பள்ளிக்கூடமாக இருக்கும்

..எதை செய்தாலும் சிந்தித்து செயல் படுங்கள் ,முதலில் மார்கத்தை தெரிந்து கொள்ளுங்கள்

மார்க்கம் சொல்லும் சகோதரத்துவம் ,விட்டுக்கொடுத்தல் போன்ற எவ்வளவோ நல்ல விசயங்களை கற்று கொண்டு மார்க்க சிந்தனையுடன் வாழ வாழ்க்கை யை கற்றுக் கொள்ளுங்கள் .

,உங்களுக்கு எதிரே நடக்கும் அநீதிகளை கண்டும் காணமல் இருக்காதீர்கள் அந்த நிகழ்வுகள் நாளை உங்களுக்கும் நடக்கும் என்பதை மனதில் நினைத்து கொண்டு செயல்படுங்கள்...,

http://kiliyanur.net/
 

Wednesday, October 17, 2012

ஒட்டு பிச்சைக்காக நாங்கள் இஸ்லாத்தையே தூக்கி எறிவோம்




இந்த உலகில் அற்ப விசயங்களுக்கு அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் 

இவர்கள் மறுமையை மறந்து விட்டார்களே 


அரசியலே ஹராம் தேர்தலும் ஹராம் தேர்தலில் போட்டியிட்டால் ஈமானை இழந்து விடுவர் ,எனவே நமது ஒரே தேவை இஸ்லாமிய ஆட்சி மட்டுமே என இவர்கள் அதிகதிகமான ரகசிய கூட்டங்களை போட்டு அப்பாவி இளைஞர்களை மூளைச் சலவை செய்து தங்களின் இயக்கத்தில் இணைத்தார்கள்.

நாட்கள் செல்லச் செல்ல இவர்கள் பாதை தான் சரி என நம்பி சில அப்பாவி இளைஞர்கள் இவர்களின் பின்னால் அணிவகுக்க ஆரம்பித்தார்கள் அன்றைக்கு இவர்களை நம்பி வந்த இளைஞர்களின் நிலை என்ன ?

280. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
(ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! ஏற்க மறுத்தவர் யார்?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறு செய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவராவார்' என்று பதிலளித்தார்கள்.
Volume :7 Book :96
 — 


4:56யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்; அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.

சொல்ல விடுங்க பா நாங்களும் தவ்ஹீத் வாதி தான்

சொல்ல விடுங்க பா நாங்களும் தவ்ஹீத் வாதி தான் 

இஸ்லாத்துக்கும் எங்களுக்கு சம்மதமே இல்லை



4629. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். 
'நம்பிக்கை கொண்டு பிறகு தம் நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடாதவர்களுக்கு உண்மையில் அமைதி உண்டு. மேலும், அவர்களே நேர்வழி அடைந்தவர்கள் ஆவர்' எனும் (திருக்குர்ஆன் 06:82 வது) வசனம் அருளப்பட்டபோது நபித்தோழர்கள், 'எங்களில் எவர் தாம் (தமக்குத்தாமே) அநீதியிழைக்கவில்லை?' என்று கேட்டனர். அப்போது, 'இணைவைப்புத்தான் மாபெரும் அநீதியாகும்' எனும் (திருக்குர்ஆன் 31:13 வது) இறைவசனம் அருளப்பட்டது. 
Volume :5 Book :65


இத்த SDPI PFI காரர்கள் எப்படி தெரியுமா ஒரு பக்கம் தவ்ஹீத் எதிராக பேசுவான் இநொரு பக்கம் தவ்ஹீத் ஆதரவாக பேசுவான் இவன் விலா மீன் க்கு ஓப்பானவன் பாம்பு பக்கம் போனால் தன் தலையை தூக்கி காட்டுவார்கள் மீன் பக்கம் போனால் இவன் வாலை தூக்கி காட்டுவார்கள்


3178. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
நான்கு குணங்கள் எவனிடம் குடிகொண்டுள்ளனவோ அவன் வடிகட்டிய நயவஞ்சகன் ஆவான். பேசும்போது பொய் சொல்வதும், வாக்குறுதியளித்தால் (அதற்கு) மாறு செய்வதும், ஒப்பந்தம் செய்தால் (நம்பிக்கை) மோசடி செய்வதும், வழக்காடினால் அவமதிப்பதும் தான் அவை. எவனிடம் இவற்றில் ஒரு குணம் குடிகொண்டுள்ளதோ அவன் அதைவிட்டுவிடும் வரை அவனுள் நயவஞ்சகத்தின் ஒரு குணம் குடியிருக்கும். 
என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். 
Volume :3 Book :58


இவர்களுடைய ஆட்டங்களை அல்லாஹ் பார்க்காமல் இருக்கிறான் என்று எண்ணிக் 

கொண்டார்களா? இஸ்லாமிய ஆட்சியை இந்தியாவிலே கொண்டு வரப் போகிறோம் என்று 

உலறிக்கொண்டு உருவாக்கப் பட்ட இந்த அரசியல் கட்சி SDPI, இன்று எந்த அளவிற்கு 

அல்லாஹ்வின் சட்டத்தை மீறி இஸ்லாத்தை விட்டே வெளியேறும் செயல்களைச் 

சாதாரணமாக செய்து கொண்டிருக்கிறது என்பதை ஜிஹாத் என்று இந்த ஓட்டுப்பொறுக்கி 

கயவர்களைப் பின்பற்றும் மக்கள் சிந்திக்க வேண்டும். அரசியல் ஹராம் ஜனநாயகம் ஹராம் 

ஓட்டுப் போடுதல் ஹராம் என்று ஆரம்பக் காலத்தில் தவ்ஹீத் சிந்தனையாளர்களை விமர்சித்த 

இவர்கள் இன்று தனக்கென்ற ஒரு அரசியல் கட்சி அமைத்து தானே இன்று அரசியல் பிரச்சாரம் 

செய்து ஓட்டுப் பொறுக்க அலையும் அவல நிலை! இவர்கள் தன்னல வாதிகள். சுய 

மோகங்களுக்காக ஒன்றை ஹராமென்று ஒருநாளும், இல்லை அது ஹலாலென்று ஒருநாளும் 

மாற்றி மாற்றி மக்களை வழிகெடுக்கும் இவர்களை மக்கள் அடையாளம் கண்டு கொண்டு 

இருகிறார்கள்


அரசியலே ஹராம் தேர்தலும் ஹராம் தேர்தலில் போட்டியிட்டால் ஈமானை இழந்து விடுவர் ,எனவே நமது ஒரே தேவை இஸ்லாமிய ஆட்சி மட்டுமே என இவர்கள் அதிகதிகமான ரகசிய கூட்டங்களை போட்டு அப்பாவி இளைஞர்களை மூளைச் சலவை செய்து தங்களின் இயக்கத்தில் இணைத்தார்கள்.

நாட்கள் செல்லச் செல்ல இவர்கள் பாதை தான் சரி என நம்பி சில அப்பாவி இளைஞர்கள் இவர்களின் பின்னால் அணிவகுக்க ஆரம்பித்தார்கள் அன்றைக்கு இவர்களை நம்பி வந்த இளைஞர்களின் நிலை என்ன ?

மூளை வரண்டது யாருக்கு??





மார்க்கம் சம்மந்தமாக, ரசூல் (ஸல்) அவர்களின் கட்டளை ஒரு பக்கம் இருக்க, உமர் (ரலி) அவர்கள், உஸ்மான் (ரலி) அவர்கள் போன்றோர், ரசூல் (ஸல்) அவர்களின் மறைவுக்கு பின்னர் சில சட்டங்களை மாற்றுகின்றனர்.

சில சட்டங்கள், அவர்களது கவனக்குறைவாலும், ரசூல் (ஸல்) அவர்களின் ஹதீதை சரி வர அறிந்து கொள்ளாததாலும் அவர்களால் மாற்றமாக அறிவிக்கப்படுகிறது.

இன்னும் சில சட்டங்களை, சில காரணங்களை கூறி, வேண்டுமென்றே கூட மாற்றுகிறார்கள். (உதாரணம், முத்தலாக், ஜும்மாவிற்கான பாங்கு..)

இவ்வாறு, ரசூல் (ஸல்) அவர்களின் சட்டம் மாற்றம் செய்யப்படும் போது, மாற்றம் செய்தது நம்மை விடவும் மேலான சஹாபாக்கள் தான் என்றாலும், ரசூல் (ஸல்) அவர்களின் சட்டம் தான் நமக்கு பெரிது என்று சஹாபாக்கள் அறிவிக்கும் சட்டங்களை நாம் ஏற்றுக்கொள்ள கூடாது என்று கூறி வருகிறோம்.

ஆனால், இன்றும், ஜும்மாவுக்கு பாங்கு சொல்லும் விஷயத்தில், சஹாபாக்களின் முறையே பல ஜமாத்களில் பின்பற்றப்படுகிறது.
அதற்கு ஆதாரம் கேட்டால், உஸ்மான் (ரலி) அவர்கள் இவ்வாறு தானே செய்திருக்கிறார்கள், என்று கூறுகிறார்கள். ரசூல் (ஸல்) இதற்கு மாற்றமாக அல்லவா செய்திருக்கிறார்கள்? என்று இவர்களிடம் திருப்பி கேட்கும் போது மௌனமாகி விடுகிறார்கள்.
இவர்களது இந்த மௌனம், ரசூல் (ஸல்) அவர்களை விட உஸ்மான் (ரலி) அவர்களை சிறந்தவாரகவும் மேலானவராகவும் இவர்கள் கருதுகிறார்கள் என்பதை தெளிவாக காட்டி விடுகிறது. 

இவர்களது இத்தகைய நம்பிக்கைக்கு நாம் பதில் கூறுவதை விட, சஹாபி ஒருவரே (உமர் (ரலி) அவர்களின் மகன்! ) பதில் கூறியிருக்கிறார். 

இவர்களது இந்த கொள்கைக்கு வேட்டு வைக்கும் ஹதீஸ் இங்கு தரப்பட்டுள்ளது!

தமத்து ஹஜ்ஜ் பற்றி அப்துல்லாஹ் பின் உமர் அவர்களிடம் ஒரு சஹாபி விளக்கம்கேட்டார். "அது அனுமதிக்கப்பட்டது தான்", என்று அப்துல்லாஹ் இப்னு உமர் அவர்கள்பதில் தருகிறார்கள். 
அதற்கு அந்த சஹாபி, "உங்கள் தந்தை (உமர் அவர்கள்) , அதை கூடாது என்று சொல்லியிருக்கிறார்களே?", என்று கேட்டார்.
அதற்கு அப்துல்லா பின் உமர் அவர்கள், ""என் தந்தை ஒன்றைதடுத்திருக்கிறார்கள், ரசூல்(ஸல்) அவர்கள் அதை செய்திருக்கிறார்கள் என்றால்எனது தந்தையின் கட்டளையை பின்பற்ற வேண்டுமா அல்லது ரசூல் (ஸல்)அவர்களின் கட்டளையை பின்பற்ற வேண்டுமா? என்பதற்கு நீ பதில் சொல்"",என்றார்கள் .
அதற்கு அவர், ரசூலை தான் பின்பற்ற வேண்டும் என்றார்கள். உடனே இப்னு உமர்அவர்கள், தமத்து ஹஜ்ஜ் அனுமதிக்கப்பட்டது தான் என்று கூறினார்கள். (திர்மிதி 753 )

Tuesday, October 16, 2012

நான்கு மாதமே ஆன இறந்த குழந்தையை





நான்கு மாதமே ஆன இறந்த குழந்தையை அடக்க விடாமல் அடக்க வந்தவர்களைத் தாக்கி வேட்டியை தூக்கிக் ------ காட்டிய ஏ.பி,சி,டி மற்றும் சுன்னத்தைப் பின்பற்றாத கேடுகெட்ட சு.ஜ பொட்டைகளைப் பாரீர்.

இறந்த குழந்தையின் குடும்பத்தின் நிலையறிந்து ஆருதல் சொல்லாமல் வேட்டியைத் தூக்கிக் காட்டிய மானங்கெட்டவர்களே உங்களுடைய ஒற்றுமை தவ்ஹீதை அழிப்பதில்தான் உள்ளது.

தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்கின்றோம் என்று அல்லாஹ்வையும், நபி (ஸல்) அவர்களையும் மட்டம் தட்டும் உங்களுக்கும், நபியைப் பற்றி இழிவாக படம் எடுத்த அந்த பாதிரிக்கும் என்னடா வித்தியாசம் இருக்கு.....
---------------------------------------------------------------------------------------------------
- முஹம்மது மன்சூர்

நாகை வடக்கு மாவட்டம் கிளியநூரில் நபி வழிக்கு
எதிராக நின்ற நல்லவர்கள்(?) ....

நான்கு மாத குழந்தையை நபிவழியில் அடக்கம்
செய்ய மறுத்து... ஜனாஸா எடுத்து வந்தவர்களை தடுத்து..
பேச்சுவார்த்தை நடத்துவது போல் நடித்து,சூழ்ச்சி செய்து
நிராயுத பாணியாக நின்றவர்களை கொடூர ஆயுதங்களால்
தாக்கி தங்கள் வீரத்தை காட்டினர்...

இதை கூட நாம் பொருத்து கொள்ளலாம்....

ஆனால் நம்மால் ஜீரணிக்க முடியாத ஒரு கேவலமான செயலை
அந்த நல்லவர்கள் செய்தனர்...

அந்த நல்லவர்கள்(?) நம்மை கேலி செய்து கைதட்டிய போது...
அது நபிவழி இல்லை... யூதர்களின் செயல் என்று கூறியதற்கு.... 

திரும்ப திரும்ப கைலியை ___________வந்து சொல்லு" என்று கூறி நம்மை கேவலமாக பேசுவது போல் நினைத்து அல்லாஹ்வையும் அவனது தூதரையும் கேலி கிண்டல் செய்ததை நம்மால் ஜீரணிக்க முடியவில்லை...

நபிவழியை நிலைநாட்ட சென்றவர்கள் அடிவாங்கியது "கேவலமா??"
எந்த நபி அடிவாங்காமல் இருந்தார்கள்....

சஹாபாக்கள் அடிவாங்கிய வரலாறு தெரியுமா????

எதிர்ப்பில் தான் தவ்ஹீத் வளரும் என்பதை
தமிழகமும் ஏன் ? உலகமே அறியும்.

Saturday, October 6, 2012

இவர்களின் நிலை




நபி (ஸல்) அவர்கள் ஓர் சபையில் இருந்தால், அந்த இடத்திர்கு வரும் (ஊருக்கு)புதியவ ர் 

என்ன கேட்பார் 


(தெரியுமா?) உங்களில் யார் முஹம்மத் என்று கேட்பார்... ஹதீஸ்... ஆக நபியவர்கள் ஓர் 

சபையில் இருந்தால் மக்களோடு மக்களாக கலந்துவிடுவார்க ள் என்பது தெளிவு!!! ஆனால் 

இந்த கோமாளியை பாருங்கள்??


ஒரு மனிதருக்கு இதுபோல் மரியாதை செலுத்த வேண்டும் என்று நாம் விருப்பப் பட்டால் 

அதற்குத் தகுதியான 


முதல் மனிதர் நம் உயிரிலினும் மேலான தலைவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் 

அல்லவா?ஒரு நபித்தோழர் வேற்று நாட்டு மன்னருக்கு அவரது சமூக மக்கள் மரியாதைச் 

செலுத்துவதைப் பார்த்து அல்லாஹ்வின்  தூதரிடம், 

இம்மன்னரைக் காட்டிலும் மரியாதைச் செலுத்த தகுதியானவர் தாங்கள் தான் என 

நபிகளாரிடம் சொன்ன போது இதுபோன்ற 

ஒருவரைத் தாழ்த்தி மற்றவரை உயர்த்தும் வணக்க முறைகளோ வாழ்த்துக்களோ 

மரியாதைகளோ இஸ்லாத்தில் இல்லை என்று அந்த நபித் தோழருக்குப் புரிய வைத்தார்கள் 

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்! நான் அமர்ந்து தொழுதால் என்னைப் பின்பற்றித் தொழும் நீங்களும் அமர்ந்து 

தொழுங்கள், நான் அமர்ந்தும் நீங்கள் நின்றும் தொழுவதை பிற மக்கள் பார்த்தால் அவர்களுக்கு 

இந்தச் செயல் 

என்னை நீங்கள் கவுரவிப்பது போல் காட்டிவிடும் என்று மக்களைப் பக்குவப் படுத்தினார்கள் நபிகள் நாயகம் 

(ஸல்) அவர்கள்! அல்லாஹ்வின் தூதரின் நிலையே இதுவாக இருக்கும் போது, நாம் செய்வது தவறுதான் எனத் 

தெரிந்தும் அதைத் திருத்தாமல் ஆணவம் கொண்டுத் திரியும் இந்தக் கோமாலி எம்மாத்தரம்! அப்படிப்பட்ட 

அழகான மார்க்கத்தைப் பெற்ற நாம், இது போன்ற கழிசடைத் தனத்தை, பிறரை தாழ்த்தி மற்றவரை உயர்த்தும் 

இந்த அறிவீனச் செயலை ஆதரிக்காலாமா என்று சகோதரர் ஸஹாபா சிந்திக்கட்டும் . மரியாதைக்காக எழுந்து 

நிற்பதைக்கூட தடுத்த மார்க்கத்தில் இருந்து கொண்டு, போலிச் சாமியார்களைப் போலத் திரியும் இதுபோன்ற 

கோமாலி வர்க்கங்களுக்கு சப்பைக்கட்டு கட்டிக் கொண்டுத் திரியாமல் திருந்தும் வழியைப் பாருங்கள். திருந்த 

முன் வருவோரைத்தான் அல்லாஹ் திருத்துவான். அசத்தியம் என தெரிந்த பின்பும் அதற்கு வரிந்து கட்டிக் 

கொண்டு திரிந்தால் உள்ளத்திற்கு முத்திரை இட்டுவிடுவான். அழிவை சந்திப்போர் அவர்கள்தானே தவிர நீங்கள் 

இம்மார்க்கத்தை வெறுப்பதால் அல்லாஹ்விடம் எதுவும் குறைந்துவிடப் போவதில்லை என்பதைப் புரிந்து 

கொள்ளவும்!

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons