Sunday, November 13, 2011

தொடர் ஊழலினால் பீஜேபியின் வாக்குகள் பாதியாக சரிந்தது



தமிழகத்தில் பீஜேபியை யாரும் கூட்டணியில் சேர்த்து கொள்வதில்லை, அதனாலேயே பீஜேபி ஒவ்வொரு தேர்தலிலும் தனித்து போட்டியிடுகின்றது அப்படி போட்டியிட்டு, 2 % வாக்குகளை பெற்று வருகின்றது. ஆனால் இந்த உள்ளாட்சி தேர்தலில் பீஜேபியின் ஊழல்கள், உட்கட்சி சண்டையினால் பீஜேபியின் சொற்ப வாக்கு வங்கியும் பாதியாக குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் 2.6 % வாக்குகளை பெற்ற பீஜேபி இந்த உள்ளாட்சி தேர்தலில் வெறும் 1.35 % வாக்குகளைதான் பெற்றுள்ளது.
கடந்த தேர்தல்களில் பீஜேபி பெற்ற வாக்குகளின் சதவீதம்
2011 உள்ளாட்சி தேர்தலில் பீஜேபி பெற்ற வாக்கு சதவீதம் -1.35%
2011 சட்டமன்ற தேர்தலில் பீஜேபி பெற்ற வாக்கு சதவீதம் – 2.6%
2009 பாராளுமன்ற தேர்தலில் பீஜேபி பெற்ற வாக்கு சதவீதம் – 2.34%
2006 சட்டமன்ற தேர்தலில் பீஜேபி பெற்ற வாக்கு சதவீதம் – 2.03%
பீஜேபி எல்லா தேர்தல்களிலும் 2 முதல் 2.5 % வாக்குகளை வாங்கி தனக்கென்று ஒரு வாக்கு வங்கி தமிழகத்தில் இருகின்றது என தம்பட்டம் அடித்துவந்தது, அந்த தம்பட்டத்திற்க்கு தமிழக மக்கள் தற்போது தர்மஅடி கொடுத்துள்ளனர், மேலும் பீஜேபியுடன் கூட்டணி வைத்த கொமுக கட்சி ஒரு இடம் கூட கிடைக்காமல் ஓட்டாண்டியாகிவிட்டது. இனி பீஜேபியோடு யார் கூட்டணி வைத்தாலும் இதுதான் நிலைமை என தமிழக மக்கள் காட்டியுள்ளனர்.
மேலும் கடந்த உள்ளாட்சி தேர்தலோடு ஒப்பிடுகையில் இந்த தேர்தலில் குறைவான இடங்களே பீஜேபி பெற்றுள்ளது, பேரூராட்சி உறுப்பினர்களில் மட்டும் சற்று கூடுதல் இடங்கள் பெற்றுள்ளது
2011 உள்ளாட்சி தேர்தலில் பீஜேபி பெற்ற இடங்கள்
மாநகராட்சி கவுன்சிலர் : 2
நகராட்சி தலைவர்கள் – 2
நகராட்சி உறுப்பினர்கள் – 37
பேரூராட்சித் தலைவர்கள் – 13
பேரூராட்சி உறுப்பினர்கள் – 181
மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் – 2
பஞ்சாயத்து யூனியன் உறுப்பினர்கள் – 30
2006 உள்ளாட்சி தேர்தலில் பீஜேபி பெற்ற இடங்கள்
மாநகராட்சி கவுன்சிலர் : 2
நகராட்சி தலைவர்கள் – 0
நகராட்சி உறுப்பினர்கள் – 44
பேரூராட்சித் தலைவர்கள் – 0
பேரூராட்சி உறுப்பினர்கள் – 148
மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் – 3
பஞ்சாயத்து யூனியன் உறுப்பினர்கள் – 31
இந்த உள்ளாட்சி தேர்தலில் பீஜேபி 2 நகராட்சி தலைவர் பதவியையும், 13 பேரூராட்சி தலைவர் பதவியையும் வென்றுள்ளது. (13 பேரூராட்சிகளும் கண்ணியாகுமரி மாவட்டத்தில்தான் , வேறு எந்த மாவடத்திலும் ஒரு பேரூராட்சியையும் கைபற்றவிலலை). இதை வைத்து கொண்டு பத்திரிக்கைகள் பீஜேபியை ஆஹா ஓஹோ என புகழ்ந்து தள்ளுகின்றன. அந்த இரண்டு நகராட்சிகள் ஒன்று நாகர்கோவில் நகராட்சி, மற்றொன்று மேட்டுபாளையம் நகராட்சி, இதில் எவ்வாரு பீஜேபி வெற்றி பெற்றது என பார்ப்போம்
பொதுவாக கண்ணியாகுமரி மாவட்டத்தில் கிறித்தவர்கள் அதிகமாக இருப்பதினால் பெரும்பாலான அரசியல் கட்சிகள் கிறித்துவ சகோதரர்களையே வேட்பாளர்களாக நிறுத்துகின்றது, இதை வைத்துகொண்டு இந்து ஒட்டுகளை ஒருங்கிணைத்து கண்ணியா குமரி மாவட்டத்தின் சில பகுதிகளில் மட்டும் பீஜேபி வளுவாக உள்ளது, இந்த உள்ளாட்சி தேர்தலில் நாகர்கோயில் நகராட்சியில் அதிமுக, திமுக , தேமுதிக ஆகிய கட்சிகள் கிறித்துவ சகோதரர்களையே வேட்பாளர்களாக நிறுத்தியது, இதை வைத்து இந்துகளின் ஓட்டுகளை ஒருங்கிணைத்து வென்றுள்ளது பீஜேபி.
அடுத்து வென்ற மேட்டுபாளையம் நகராட்சியிலும் இதே ஃபார்முலாதான், அதிமுக, திமுக, தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் முஸ்லீம் வேட்பாளர்களை நிறுத்தியது, பீஜேபி ஒரு இந்து வேட்பாளரை நிறுத்தி இந்து ஓட்டுகளை பெற்று வென்றுள்ளது.
மேட்டுபாளையம் நகராட்சியின் ஓட்டு விபரம்
1.சதீஸ்குமார் (பிஜேபி) – 11326
2. நாசர் (அதிமுக) – 9495
3. அப்துல் ஹமீது (திமுக) – 5833
4. S.ஜாபர் சாதிக் (தேமுதிக) – 1456
5. சிராஜ் (பாமக) – 737
6. M.ஜாபர் சாதிக் (சுயேட்சை) – 86
இப்படி சந்தர்பத்தை பயன்படுத்தி சொற்ப்ப இடங்களில் பீஜேபி வெற்றி பெருகின்றதே தவிர தமிழக மக்களால் புறகணிக்கபட்ட கட்சிதான் பீஜேபி என்பதை அது வாங்கும் வாக்குகளை வைத்து தெரிந்து கொள்ளலாம், அனைத்து இந்துதுவா கட்சிகள். சங்பரிவார கும்பலகள் சேர்ந்து பெற்ற வாக்குகள் வெரும் 1.35 % தான். உலகமகா ஊழல் செய்துவிட்டு , ஊழலுக்கு எதிரான யாத்திரை என மக்களை ஏமாற்ற நினைத்து, ஏமாந்து போயுள்ளது பீஜேபி.
S.சித்தீக்.M.Tech

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons