Wednesday, November 2, 2011

பெருநாள் தொழுகையும் காவல்துறையின் அனுமதியும் ஒரு பார்வை-


 காயிதே மில்லத் திடலின் தற்போதிய நிலை என்று நாம் ஒரு தலைப்பை குறிப்பிட்டால்  உங்களுக்கு உடனே ஞாபகம் வருவது காயிதே மில்லத் திடலில்பெருநாள் அன்று நடைபெறும் சிறப்பு தொழுகையே யார் நடத்துவது என்றுதானே ஆம்மாங்க அந்த செய்தியின் தற்போதிய நிலைபற்றி நாம் பார்ப்போம்.




பலஆண்டுகளாக எந்த ஒரு அமைப்பும் பெருநாள் சிறப்பு தொழுகை நடத்த தேர்வுசெய்யாதே.... இந்த காயிதேமில்லத் திடலில் முதல் முதலில்  2005 ஆண்டு முதல் காயிதே மில்லத் திடலில் தர்ஹாவாதிகளின் சூழ்ச்சிகள் அனைத்தையும் எதிர்கொண்டு TNTJ இன்று வரை சிறப்பு முறையில் தான் தொழுகையே நடத்தி வருகிறது .அதேசமயம் பிற இயக்கங்களிலிருந்து முன்பு எந்த ஒரு பிரச்சனையும் இடையூறும் ஏற்படாமல் சிறப்பான முறையில் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றுவருவதை உள்ளூர் மக்கள் அனைவரும்     நல்லாவே அறிவார்கள்.காலமாற்றத்தினால் தவ்ஹீத் கொள்கையே அறிந்த மக்கள்  பெருநாள் சிறப்பு தொழுகைகான திடலை நோக்கி  கூட்டம்  கூட்டமாக வருவதை நாம் காணமுடிந்தது. .  நாளடைவில்  மக்கள் மனதில்  தவ்ஹீத் கொள்கையே சரி என்று பெருபாலான மக்கள் விளங்கிகொண்டார்கள் என்பதை நம்மால் விளங்க முடிகிறது .இதனை சுன்னத்வல் ஜமாத் தலைவர்கள் சரியான நேரத்தில் புரிந்து கொண்டு எந்த தவ்ஹீத்தை சுன்னத்வல் ஜமாத் தலைவர்கள்  ஆரம்பத்தில் எதிர்தார்களோ .அதே சுன்னத் வல் ஜமாத் தலைவர்களுக்கு இதுவே சரியான கொள்கை  என்று விளங்கியதை நம்மால்  பார்க்கமுடிகிறது.
உதாரணத்திற்க்கு சொல்லுவதாக இருந்தால் இதே கடையநல்லூர் சுன்னத்வல் ஜமாத் பள்ளிகளில் ஆரம்பத்தில் பெண்கள் தொழுகை பள்ளிக்கு வருவதை அனுமதிப்பதில்லை .ஆனால் இன்று நிலைமை மாறி பெண்களும் பெருநாள் அன்று நடைபெறும் சிறப்பு தொழுகைக்கு வரும்படி அறிப்பு செய்கிறார்கள்.

தவ்ஹீத்தை விளங்கி கொண்ட மக்கள்  திடலை நோக்கி வாருங்கள் என்று TNTJ ஒரு அழைப்பு விடும் போது மக்கள் அனைவரும் வருகிறார்கள் ! இதன் மூலியமாக பெருபாலான மக்கள் TNTJ வைதான்  நம்புகிறார்கள் என்ற நிலை  சில இயக்கங்களுக்கு  தலைவலியே ஏற்படுத்தியது .

மக்களை  தவ்ஹீத் கொள்கைலிருந்து திசைதிருப்ப நாமும் எப்படியாவது இதே காயிதே மில்லத் திடலில் பெருநாள் தொழுகையே  நம்முடைய இயக்கங்கள் சார்பாக  நடத்தியே தீரவேண்டும் என்ற மனநிலைக்கு அவர்கள் வந்தார்கள் இதற்காக எந்த ஒரு காரியத்தை செய்வதற்க்கு மார்க்கம் தடையாக இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் சென்ற ஆண்டு ஹஜ்பெருநாள்  இஸ்லாமிய மார்க்க சட்டத்தை மீறி நடத்தினர் . மார்க்க சட்ட வரம்பிற்க்கு உட்பட்டு தவ்ஹீத் கொள்கை வாதிகள் நடத்தினார்கள்மார்க்க சட்டம் படி பெருநாள் அறிவித்த தவ்ஹீத் கொள்கைவாதிகளுக்கு  ஒருநாட்களுக்கு  பிந்தைய  நாட்களில் நாங்களும் காயிதே மில்லத் திடலில்பெருநாள் தொழுகை நடத்திகொள்கிறோம் என்று காவல் துறையில் அனுமதி வாங்கி மார்க்க சட்டத்தை மீறி தொழுகை நடத்தினார்களே... இவர்களின் செயலை அன்றைய TNTJ ஹசரத்  இன்றைய இவர்களின் நண்பர்  அந்த ஹசரத் பதிலளிப்பார்களா !

 
இப்போது அந்த  சில இயக்கங்கள்  ஹசரத்துடன் மறைமுக கூட்டணியமைத்து இனி நடக்கும் ஒவ்வொரு ஆண்டும் பெருநாள் தொழுகைக்கான சிறப்பு தொழுகையே எந்த இயக்கம்  நடத்துவது என்று பிரச்சனை ஏற்படும்போது நாமும் காவல் நிலையத்தில் சென்று எங்களுக்கும் அனுமதி தாருங்கள் என்று கேட்டு இதுவே ஒரு பிரச்சனையாக்கி இனி வரும் காலங்களில் காயிதே மில்லத் திடலில் யாருக்கும் எந்த இயக்கங்களுக்கும் இனி  சிறப்பு தொழுகை நடத்தவிடாமல் தடுத்திரலாம்  என்று பகல் கனவு கான்கிறார்கள் .அல்லா சூழ்ச்சிகாரர்களுக்கெல்லாம் சூழ்ச்சிகாரன் .

தற்போது நடக்கவிருக்கும் பெருநாட்களிலும் பிரச்சனை ஏற்படுத்த நினைக்கிறார்கள் .நாமும் கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம் வெற்றியாளர்கள் யார் என்று பார்ப்போம் .

 
ஆசிரியர் - முஹாம்ரா ஆன்லைன்

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons