Monday, November 7, 2011

தடைகளை தாண்டி எழுச்சியுடன் நடைபெற்ற தத்துவாஞ்சேரி TNTJ பொதுக் கூட்டம்!

 தஞ்சை வடக்கு மாவட்டம் தத்துவாஞ்சேரியில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கம் ஊர். இவ்வூரில் உள்ள இளைஞர்கள் பெரும்பாலானோர் மது போன்ற ஒழுக்கக்கேடான காரியங்களில் மூழ்கி கிடக்கின்றனர். இத்தகைய சமுதாய சீரழிவை கண்டு எந்த ஒரு இயக்கமோ, ஊர் ஜமாத்தோ சீர்திருத்தம் செய்ய முன்வரவில்லை.




இந்நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தத்துவாஞ்சேரியில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தனது கிளையை அங்கு துவங்கியது. தத்துவாஞ்சேரியில் மேற்சொன்ன சமுதாய சீரழிவை களையவும், ஏகத்துவ பிரச்சாரத்தை கொண்டு செல்லும் விதமாக கடந்த 03.11.11 வியாழக்கிழமை அன்று பொதுக்கூட்டம் ஏற்ப்பாடு செய்யப்பட்டது.

இதற்காக 23.10.11 அன்று காவல் நிலையத்தில் அனுமதி பெறப்பட்டது. இதில் மேலாண்மைக்குழு தலைவர் ஷம்சுலுஹா ரஹ்மானி அவர்கள் இறைவனை மட்டும் வணக்குவோம் என்ற தலைப்பிலும், சகோ:தாவுத் கைசர் அவர்கள் சமுதாய சீரழிவு என்ற தலைப்பிலும் சகோதரி: சபுர் நிசா ஆலிமா அவர்கள் உறவை பேணுவோம் என்ற தலைப்பிலும் உரையாற்ற இருந்தனர்.

தத்துவாஞ்சேரி ஊர் மக்களிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தினால் பள்ளிவாசல் நிவாகம் அமைக்கப்படாமல் இருந்தது. தற்போது கணக்காளர் மட்டும்தான் பள்ளிவாசல் நிர்வாக பணிகளை கவனித்து வருகிறார். இச்சூழலில் ஏகத்துவ பிரச்சாரத்திற்கு எதிராக கொள்கை மறந்த தமுமுக வின் ஊர் நிர்வாகியாக இல்லாத ஒருவரை ஊர் நிர்வாகி போல் ஏற்ப்படுத்தி கொண்டு மக்களிடையே எந்த ஒரு விபரத்தையும் கூறாமல் ஊரில் குழப்பத்தை விளைவிக்க பொதுக்கூட்டம் நடத்துகிறார்கள் இதற்கு எதிராக கைஎழுத்து போடுங்கள் என்று சொல்லியும் கைஎழுத்து போடாவிட்டால் ஊர் நீக்கம் செய்து விடுவோம் என்று மிரட்டி கைஎழுத்து வாங்கி திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறை பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்தனர். உடன் கிளை நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகம் உடனே திருப்பனந்தாள் காவல் நிலையத்திற்கு சென்று காவல் துறை ஆய்வாளரை சந்தித்தனர். ஜமாத்தினர் ஊரில் பிரச்சினை ஏற்ப்படும் என்று புகார் கொடுத்துள்ளனர் ஆகையால் உங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது என்றார். சட்டத்திற்கு உட்பட்டு நடத்தக்கூடிய பொதுக்கூட்டத்தை ரத்து செய்தால் தடையைமீறி பொதுக்கூட்டம் நடத்துவோம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்தது. 

உடனே காவல் துறை ஆய்வாளர் நாளை காலை 10 மணிக்கு வாருங்கள் DSP தலைமையில் சமாதான கூட்டம் நடைபெறும் அதில் கலந்துகொண்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள் என்று கூறிவிட்டார்.

மறுநாள் காலை சமாதான கூட்டத்தில் DSP அவர்கள் இருதரப்பையும் விசாரித்து கூட்டத்தை தடுத்து நிறுத்த சட்டத்தில் இடமில்லை என்று கூறிவிட்டார். (நாம் கூட்டத்தை ஜின்னா தெருவில் நடத்த ஏற்ப்பாடு செய்திருந்தோம்) காவல் நிலையத்தில் மூக்குடைபட்ட தமுமுகவினர் கூட்டத்தை முஸ்லிம் தெருவில் போடக்கூடாது என்று கூறினார். DSP அவர்கள் இருதரப்பினரிடையே பேசி இனி எந்த ஒரு கட்சியோ, இயக்கமோ கூட்டம் நடத்தினால் தெருவில் போட அனுமதி இல்லை என்றும் மெயின்ரோட்டில் தான் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்று இருதரப்பினரிடையே கைஎழுத்து வாங்கிக்கொண்டார்.

இவ்விடைஞ்சளுக்கு பிறகு அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் பொதுக்கூட்டம் மிகப்பெரிய எழுச்சியுடன் நடைப்பெற்றது. அடைமழை பெய்துவரும் இவ்வேளையில் தமுமுகவின் இடையூறு என்றவுடன் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
நாம் முன்பு ஏற்ப்பாடு செய்தது போல் தெருவில் நடத்தி இருந்தால் ஏற்ப்பட்டிருக்கும் எழுச்சியை விட மெயின்ரோட்டில் பொதுக்கூட்டத்திற்கு  பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது அல்ஹம்துலில்லாஹ். 

மாற்றுமத நண்பர்கள் இப்பொதுக்கூட்டத்தில் பேசிய கருத்துக்களை நம்மிடையே தனியாக வந்து பாராட்டி சென்றனர். எல்ல புகழும் இறைவனுக்கே.

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons