Sunday, November 13, 2011

அத்வானி ரதத்தின் மீது முட்டை வீச்சு : கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பு




பட்டிண்டா : பஞ்சாப் மாநிலத்தில் பாரதிய ஜனதா தலைவர் அத்வானி சென்ற ரதத்தின் மீது, முட்டைகள் வீசப்பட்டன; கறுப்புக் கொடிகள் காட்டப்பட்டன. ஊழலுக்கு எதிராக பா.ஜ., தலைவர் அத்வானி, நாடு முழுவதும் ரத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் அவரது யாத்திரை நடக்கிறது. பட்டிண்டா மாவட்டத்தின் சங்கீரா பகுதியில் அவர் நேற்று ரதத்தில் சென்று கொண்டிருக்கும் போது, சிம்ரஞ்சித்சிங் மான் தலைமையிலான சிரோன்மணி அகாலிதள கட்சி ஆதரவாளர்கள் காலிஸ்தானை ஆதரித்தும், அத்வானியை எதிர்த்தும் கோஷம் போட்டனர்.

முன்னெச்சரிக்கையாக அவர்கள் கைது செய்யப்பட்டனர். அதே பகுதியின் மற்றொரு இடத்தில், முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நஜினா பேகம் என்பவரது தலைமையில் அத்வானியை எதிர்த்து கோஷம் போட்டனர். சாலை வழியாக ரத யாத்திரை சென்றபோது வயல்வெளியில் நின்றிருந்த எதிர்ப்பாளர்கள் சிலர், அவரது ரதத்தின் மீது, முட்டைகளை எறிந்தனர்.

இன்னும் சிலர் கறுப்பு கொடிகளைக் காட்டினர். அரியானா மாநில எல்லை அருகே உள்ள தாப்வாலி பகுதியில், துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதலின் மனைவி ஹர்சிம்ரத் கவுர், அத்வானியை வரவேற்றார்.
பட்டிண்டாவில் அத்வானி கூறியதாவது: நான் தேர்தலை கருத்தில் கொண்டு இந்த யாத்திரையை நடத்தவில்லை. ஊழல்கள் நிறைந்த இந்த நாட்டில் வாழ்வது கடினம்.

அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே இந்த யாத்திரை நடத்துகிறேன். தமிழகத்தில் கூட என்னுடைய யாத்திரைக்கு அமோக வரவேற்பு இருந்தது. ஊழலுக்கு எதிராக மக்கள் அதிக கோபத்துடன் இருப்பதால், இந்த யாத்திரைக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. பிரதமர் ஒரு பொருளாதார நிபுணர். அவரால் கூட பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதற்கு காரணம் ஊழலே.
வாஜ்பாய் அரசு காலத்தில் அணு குண்டு சோதனை தொடர்பாக அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தபோது கூட ஆறாண்டுகள் விலைவாசி கட்டுப்பாட்டில் இருந்தது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் தி.மு.க., அமைச்சர்கள் பலிகடாவாக்கப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட மூத்த காங்கிரஸ் அமைச்சர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அத்வானி கூறினார்.

2 comments:

சத்தியப்பாதை said...

என்ன? யாரையும் குறை சொல்லும் அளவிற்கு தற்போது செய்திகள் ஏதும் இல்லையோ? அத்வானியின் ரதயாத்திரை போன்ற செய்திகள் உங்களது தளத்திற்கு ஏற்ற செய்திகள் இல்லையே? காரணம் உங்களது தளத்தின் நோக்கம் "குழப்பவாதிகளுக்கு எதிரான ஒரு பயணமாயிற்றே!" அத்வானி போன்றவர்கள் குழப்பவாதிகள் அல்ல, தெளிவான எதிரிகள்.

குழப்பவாதிக்கு எதிராக ஒரு பயணம் said...

சகோதர என்னுடைய ப்ளாக் நேம் என்ன குழப்பவாதி அத்வானி யார்

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons