
கடந்த சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்காக கமிஷன் அமைத்த ஜெயலாலிதாவை ஆதரித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பிரச்சாரம் செய்தது. ஆனால் அப்போது திமுக வின் சிறுபான்மைப் பிரிவாக இருந்த மமகட்சியினர் அதாவது தமுமுகவினர், ஜெயலலிதா அமைத்த ஆணையத்தை வேஸ்ட் பேப்பர் ஆணயம் என்றும், அது டாய்லட் பேப்பர் தான் என்றும் மிகவும் மட்ட ரகமாக விமர்சனம் செய்தனர். மேலும், இந்த டாய்லட் பேப்பர் மலம் கழித்துவிட்டு துடைத்துப் போடத்தான் உதவும் என்றும் பிரச்சாரம் செய்தனர்.அப்போது முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டுமானால் அதற்கென்று ஆணையம் அமைக்கப்பட்டு அவர்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில் தான் இடஒதுக்கீடு வழங்க முடியும் என்பதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்...