Friday, February 4, 2011

தாளம் போடும் தகர டப்பாக்கள். சுயநலத்திற்காக சமுதாயத்தை அடகு வைக்கும் தமுமுக என்ற தரங்கெட்ட அமைப்பு.




தமிழக வரலாற்றில் தவ்ஹீதை மக்களுக்கு எடுத்து சொல்லி கப்ரு வணக்கம் என்ற வழிகேட்டிலிருந்து மக்களை மீட்க வேண்டும் என்பதற்காக பல இயக்கங்களை நமது தவ்ஹீத் சகோதரர்கள் ஆரம்பித்தார்கள் ஒவ்வொன்றும் தவ்ஹீதை விட்டும் தடம் புரலும் நேரத்திலெல்லாம் அவற்றைவிட்டும் அவர்கள் தூரமாக தூய்மையான இயக்கம் ஒன்றை நிறுவவேண்டும் என்பதற்காக ஒன்றன் பின் ஒன்றாக நம்முடன் சேர்ந்திருந்து கொள்கையற்ற சுய இலாபத்திற்காக கொள்கை வேஷம் போட்டவர்களை விட்டும் பிரிந்து தனி இயக்கம் கண்டார்கள்.

அந்த வகையில் மார்க்கத்தை அதன் தூய வடிவில் மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்ப்பதற்க்காகவும், அரசியல் மற்றும் ஆன்மீக ரீதியில் தமிழக மக்களை சரியான வழிகாட்டுதலில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவும் உருவாக்கப் பட்ட ஒரு இயக்கம் தான் இந்த தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்.(தமுமுக) 

இந்த இயக்கத்தின் ஆரம்ப கால வளர்ச்சியின் வேகம் தவ்ஹீதுக்கு எதிராக குரல் கொடுத்தவர்களின் வயிறுகளில் புளியைக் காய்ச்சிது.

மதுரையில் தமுக்கம் மைதானத்தில் நடந்த வாழ்வுரிமை மாநாடு இதற்கு ஒரு எடுத்துக் காட்டு.

படிப்படியாக அரசியல் ரீதியாக பல களங்களை கண்டுவந்த தமுமுக தமிழக முஸ்லீம்களின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தியாக வழுப்பெற்றது.

புகழும்,பணமும் சேறும் போது தான் ஒரு மனிதன் அவசரமாக தவறிழைக்க முற்படுவான்  என்பது நியதி. 

நபியவர்கள் மக்கா நகரத்தை வெற்றி கொண்ட போது அல்லாஹ் நபியவர்களுக்கு கூறிய முதல் வார்த்தை இது தன்னால் நிகழ்ந்தது என்று தவறாக நினைப்பதற்கு முன் இறைவனால் நிகழ்ந்தது என்பதை நினைத்து இறைவனை புகழுங்கள் என்பதாகும்.

ஏகத்துவக் கொள்கையை உயிர் மூச்சாகக் கொண்டிருந்த சகோதரர்களின் தியாகத்தினாலும் ஆன்மீகம் மற்றும் அரசியல் அனைத்திலும் முதிர்ந்த அறிவு பெற்ற ஆலிம் பெருமக்களாலும் தொடர்ச்சியாக வெற்றிப் பாதையில் பயணித்த தமுமுக என்ற சீறிய அமைப்பில் ஷைத்தானியக் கொள்கைக்கு வயப்பட்டவர்களின் உள்ளங்கள் பதவி வெறியாலும், புகழாசையாலும் தடுமாற ஆரம்பித்தது.

அதன் விளைவு தங்களுக்கு கொடுக்கப்பட்ட பதவிகளை சொற்ப உலகாதாயத்திற்காக பயன்படுத்தினார்கள்.

எந்தத் தவ்ஹீதைப் பிரச்சாரம் செய்வதற்காக தமுமுக ஆரம்பிக்கப்பட்டதோ அந்தத் தமுமுக வின் வளர்சிச்கு தவ்ஹீத் பிரச்சாரம் தடையாக இருக்கிறது என்று தவ்ஹீதை ஓரங்கட்டத் துணிந்தார்கள்.

இதன் விளைவு தமுமுகவை உருவாக்கி,உயிர்ப்பித்து அதற்கு புத்துணர்ச்சியூட்டிய மிக முக்கிய நிர்வாகிகளாக இருந்தவர்கள் அந்த இயக்கத்தை விட்டு பிரிந்து தனி இயக்கம் காண வேண்டிய நிலை ஏற்பட்டது.

கொள்கையில் தடம் புரண்ட தமுமுக கொள்கையை விட்டே செல்லுமளவுக்கு இன்றைய நிலை மாறியிருக்கிறது.

தமுமுக வில் மிக முக்கிய பொருப்புக்களில் இருந்தவர்களால் உருவாக்கப் பட்டதுதான் இன்றைய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு தமிழக முஸ்லீம்களுக்காக ஆன்மீக மற்றும் அரசியல் ரீதியாக இன்று குரல் கொடுத்துவரும் இந்த அமைப்பு தான் இன்றைக்கு முஸ்லீம்களின் அரசியல் அபிலாசைகளை நிர்ணயிக்கக் கூடியதாக உள்ளது என்பது அணைவருக்கும் தெரிந்ததே!

தமுமுக வும், மமக வும். வரலாற்று துரோகிகள்.

சுய இலாபத்திற்காக கொள்கையை அடகு வைத்தவர்களின் இறுதி நிலையாக இன்று மமக என்ற பெயரில் அரசியலிலும் குதித்து ஒரு சீட்டைக் கூட பெற முடியாமல் ஆப்பிழுத்த குரங்கு போல் விளித்துக் கொண்டிருப்பது உலகறிந்த உண்மை.

மக்களை ஏமாற்றும் மமக தமுமுக கூட்டணி.

சமுதாய மக்களுக்காக பாடுபடுவதாக சொல்லிக் கொண்டு திரிந்த இந்தக் கயவர்களின் சுயரூபம் மமக வை இவர்கள் உருவாக்குவதற்கு முன்பே பல முறை வெளிக்காட்டப் பட்டிருந்தாலும் மமக வின் உதயத்துடன் தெளிவாகவே மக்களுக்கு புரிய ஆரம்பித்தது.

தவ்ஹீத் சகோதரர்கள் அந்த இயக்கத்தில் இருந்த காலத்தில் மக்களுக்காக வாளியேந்தினார்கள் ஆனால் இன்று அந்த இயக்கத் தலைவர்கள் தங்களுக்காக அரசியல் தலைவர்களிடம் மடிப்பிச்சை கேட்கிறார்கள்.

யாராவது ஒரு சீட்டு தரமாட்டார்களா? என்ற அபரிமிதமான வேட்கை, ஆசை, வெட்கம்,மானம் அற்ற கயமைத் தனம்.

அம்மா தந்தால் அம்மாவிற்கு சேலை பிடிப்போம்.

அய்யா தந்தால் அய்யாவிற்கு வேட்டி பிடிப்போம்.

அந்தோ பரிதாபம் வாத்தியார் என்று தங்களைச் சொல்லிக் கொண்டவர்களின் நிலையோ அரசியல் வாதிகளின் பக்கவாத்தியமானது.

எடுப்பார் கைப்பிள்ளை என்ற நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளதை உணர்ந்தும் இன்னும் மக்களை ஏமாற்ற நினைக்கும் இந்த கபடத்தனத்தை , கயமைத் தனத்தை, அளவு மீறிய அயோக்கியத்தனத்தை என்னவென்பது?

மமகவும், தேர்தல் நிலைபாடும்.

எதிர்வரும் தேர்தலில் தங்களுக்க அதிகமாக எந்தக் கட்சி சீட்டு தருவதாக சொல்கிறதோ அந்தக் கட்சிக்கு ஆதரவு அதாவது எந்தவொரு நிபந்தனையும் இன்றி அம்மாவை ஆதரிப்பதாக மமக என்ற மாமா கட்சி அறிக்கை விடுத்துள்ளது.

மக்களுக்காக கோரிக்கை என்ற நிலை போய் சீட்டுக்காக ஆதரவு என்ற நிலையை இவர்கள் எடுத்துள்ளார்கள் தங்கள் சுய இலாபம் தான் இவர்களுக்கு முக்கியமாக தெரிகிறதே தவிர மக்களின் பிரச்சினை இவர்களுக்கு முக்கியமல்ல என்பது தெளிவு.

சென்ற தேர்தலில் களத்தில் நின்ற இவர்களின் நிலையும் ஓட்டுக்காக பூசாரியிடம் ஆசி வாங்கிய லட்சனமும் மக்கள் மனங்களை விட்டும் இன்னும் அகலவில்லை.

பாவம் சென்ற தேர்தலில் வாத்தியாரின் கணவு கணவாகவே போனது இந்தத் தேர்தலிலாவது மேலே வருவாரா என்று எண்ணியவர்களும் இப்போது இது திருந்தாத ஜன்மஙகள் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள்.

இனி எல்லாம் அம்மா மயம்தான்.

இப்போது தொகுதிப் பங்கீடு குறி;த்துப் பேசிக்கொண்டிருக்கிறார்களாம். சென்ற தேர்தலில் மத்திய அரசில் கூட்டனி வைத்தவர்களைப் போல் நினைப்பாக்கும்.

வாத்தியாரே ஏமாற்றும் அரசியல்வாதியிடம் மக்கள் ஏமாறுவார்கள் ஆனால் துரொகம் செய்யும் மதவாதியிடம் மக்கள் கவணமாகத் தான் இருப்பார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டு தான் இருப்பீர்கள் என்று நினைக்கிறோம்.

இன்ஷா அல்லாஹ் நாளை தமுமுக சீமான் கூட்டனியின் நிலை என்னவென்பதைப் பற்றிப் பார்ப்போம்.



0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons