Sunday, February 27, 2011

மமகவுக்கு பல்லக்கு தூக்கும் மாமா(மாசற்ற(?) மாணிக்கங்கள்)க்கள்


சமுதாயத்தின் மானம் காக்கப் போகிறோம் என சொல்லி நன்றாக கவனிக்கவும் சமுதாயத்தின் மானம் காக்கப்போகிறோம் என்று மட்டும் சொல்லி தமிழக அரசியலில் எங்களின் பிரதிநிதித்துவத்தை அடைந்தே தீரூவோம் என்ற ஒரே நோக்கத்திற்காக கவனிக்கவும் என்ற ஒரே நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட மனித நேயமிக்க மக்கள் கட்சி இன்றைக்கு வெறும் 3 சீட்டுக்களுக்கு தன் தொண்டர்களை அடகுவைத்து சமுதாயத்தினர் மற்றும் சமுதாய ஆர்வலர்கள் என‌ பலராலும் விமர்சிக்கப்பட்டு வருவது அறிந்த ஒரு செய்திதான். சாதாரணமாக முஸ்லீம்லீக்தேசியலீக் உள்ளிட்ட இஸ்லாமிய கட்சிகள் சாதாரணமாக பெற்றுவந்த 5 சீட்டுகளுக்கு ஆப்பு வைக்கும் விதமாக அவர்களை எதிர்த்தே போட்டியிட்டு மற்ற ஒரு மூன்றாவது நபரை வெற்றியடைய வைப்பதற்காக முக்கியமாக தாங்கள் மட்டும் எப்படியாவது எம்மெல்லே ஆகிவிடவேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக வந்த வரை லாபம் என மூன்று சீட்டுக்களை எந்த விதமான நிபந்தனைகளும் இன்றி மற்ற கட்சிகள் சாதாரணமாக நடத்தும் இழுபறி பேச்சுவார்த்தைகள் கூட இல்லாமல் எனக்கு ஒன்னு உனக்கு ஒன்னு என்ற ரீதியில் 3 சீட்டுக்களைப் பெற்றுக்கொண்டு இஸ்லாமிய மானத்தை காத்தில் பறக்கவிட்டு பல் தெறிக்க சிரிக்கிறார் பேராச்சிரியர்.
இவ்வளவு கேவலமாக கீழ்த்தரமாக சமுதாயத்தை அடகு வைத்து 3 சீட்டு வாங்கி வந்திருக்கும் வைகைப் புயல்களை ஊரே காரித்துப்பினாலும் அவர்களுக்கு சாமரம் வீசும் மன்னன் ஜமாத் மட்டும் அவர்களுக்கு ஆதரவாக பச்சை கொடி பிடித்து இருப்பது தான் கொடுமையிலும் கொடுமை. அதிலும் மன்னன் ஜமாத் அவர்களுக்கு ஆதரவாக வைக்கும் வாதத்தை நினைக்கும் போது சிரிப்பாகத்தான் வருகிறது. அதாவது வைகோ "கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிடம் 35தொகுதிகள் பெற்றாராம். இந்த அடிப்படையில் நாடாளுமன்றத்தேர்தலில் 6தொகுதிகள் பெறவேண்டுமாம். ஆனால் 2009நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 4 தொகுதிகளைத் தான் பெற்றாராம். அப்படியாயின் மதிமுக மானமிழந்து விட்டதா? என அற்புதமான‌ வாதத்தை வைத்திருக்கிறார் மன்னன் ஜமாத்தின் அடிப்பொடி ஒருவர்.
நாம் அவர்களிடம் கேட்கிற கேள்வி! ஏம்பா! உங்களுக்கெல்லாம் அறிவே இல்லையாகொஞ்சம் கூட சிந்திக்கும் திறன் இல்லையாவைகோவும் சரி,காங்கிரஸூம் சரிஅவர்கள் யாரும் சமுதாய மானம் காக்க போகிறேன் என புறப்படவில்லை. அவர்கள் அவர்களின் கட்சிகளுக்காக உழைக்கிறார்கள். அவர்கள் அரசியல்வாதிகள். அதுமட்டுமில்லாமல் வைகோ 2006 ஆம் ஆண்டு தேர்தலில் வைகோ 35 தொகுதிகளை ஏற்றுக்கொண்டார் ,அதேபோல 2009தேர்தலில் 4 தொகுதிகளை ஏற்றுக்கொண்டார். ஆனால் சமுதாய மானம் காக்க வீறுகொண்டு எழுந்த வெற்றி வீரர்கள் ஒரு தொகுதியை ஏற்றுக் கொண்டார்களாஇல்லையே! ஒரு தொகுதி கலாச்சாரத்தை ஒழிக்கத்தானய்யா அவர்கள் புயலென புறப்பட்டார்கள். கருணாநிதியால் இழிவுபடுத்தப்பட்டு கடைசியாக 4 தொகுதிகளில் போட்டியிட்டு மண்ணைக் கவ்வினார்கள் . அந்தக் கணக்குப்படி அதாவது நீங்கள் எடுத்து வைக்கும் வைகோவின் தியரிப்படி 35 க்கு6 என்ற வீதம் வரும். ஆனால் அவரோ 4 ஐப் பெற்றுக்கொண்டார். அதாவது நாடாளுமன்ற வீதம் 24 க்கு 4 வரும்.
அந்த மாதிரி இன்றைக்கு நீங்கள் சத்தமில்லாமல் சாமரம் வீசும் மேற்படி சமுதாய தலைவர்கள் 4 கணக்குக்கு 4 X 6= 24 பெற்றிருக்க வேண்டும். அல்லது நீங்கள் சுட்டிக்காட்டி இருக்கும் வைகோ தியரிப்படி 2 X 6=12ஆவது பெற்றிருக்க வேண்டும். ஆனால் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் தலைவரும் பொதுச்செயலாளரும் போட்டியிட்டால் போதும் என்ற வேகத்தில் வெறும் 3சீட்டுக்களை வாங்கி வந்து வந்திருக்கிறார். அதை எதிர்க்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் அவங்களுக்கு இப்படி மாப்பிள்ளை விசிறி வீசுறீங்களே! நியாயமாஇப்ப நாங்க ஏதாவது புதுப்பாயிண்ட வச்சமாநீங்க சொல்லியிருக்கிற மொக்கைப் பாயிண்டில் இருந்து தான் வாதத்தை எடுத்து வைத்திருக்கிறோம். எப்படியாவது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தைத் தாக்கவும்பிஜேவை தாக்கவும் யார் தயாராக வந்தாலும் அவர்களுக்கு வால்பிடித்து அவர்களோடு சேர்ந்து கொள்வோம் என்ற கொள்கையில் இருந்தால் இப்படித்தான் சில நேரங்களில் சிந்தனை பல்பு எரியாது.
'மமகவை மண்ணைக் கவ்வ வைப்போம்என்று சமுதாய உணவோடு(அது சமுதாய உணவு இல்லை. உணர்வு..ஸ்பெல்லிங் மிஸ்டேக்)சொல்லக்கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மண்ணைக் கவ்வ வைப்போம் என்று 'மனுநீதி'யையும் தாண்டிய வெறியோடு தீர்மானம் போடும் இவர்களுக்குமமக மூன்று சீட்டு வாங்கினால் என்ன?முப்பது சீட்டு வாங்கினால் என்ன? என்று என்று கேட்கும் சிந்தனையை அடகுவைத்து விட்ட சகோதர்களே!! ஒரு சீட்டு கலாச்சாரத்தை ஒழிக்க வந்து மானங்கெட்டுப் போய் மதியிழந்து நிற்கும் அவர்களைத் தட்டிக்கேட்க எங்களுக்கு மட்டுமல்ல! சமுதாயத்தின் ஒவ்வொரு நபருக்கும் உரிமை உண்டு. ஆனால் அவர்களுக்கு ஜால்ரா அடிக்கஅவர்களிடம் லாபம் எதிர்பார்த்து நாக்கை தொங்கப்போட்டுக் கொண்டு நிற்பவர்களுக்கு மட்டும் தான் உரிமை உண்டு.
''தமது கட்சி வேட்பாளர்களில் 25 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தும் கட்சிக்கே ஆதரவுஎன்று கூட்டணி 'டிமான்ட்வைக்கத் தயாராஇவ்வாறு செய்தால் நீங்கள் இடஒதுக்கீடு பெறாமலேயே முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை சட்டமன்றத்தில் ஏற்படுத்தி விடலாமே!
சே! என்ன ஒரு வாதம்! கொள்கை தான் இல்ல அட்லீஸ்ட் நிர்வாக அரிச்சுவடியாவது தெரிந்திருக்கும் என எதிர்பார்த்தோம். முதலில் ஒருவனுக்கு கொடுக்கும் சக்தி இருந்தால் தான் அவனிடம் சென்று கேட்பவன் அதைப் பெற முடியும். பிச்சை போடவே வழியில்லாதவன்கிட்ட போயி பிரியாணி வாங்கிக்கேட்ட கதயா இருக்குது மன்னன் ஜமாத்தின் வாதம். காலங்காலமாக இஸ்லாமியர்களுக்கு வாரியமும் போர்வையும் போர்த்தி வந்த அரசியல்வாதிகள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினரின் சீரிய போராட்டங்களினால் (பழைய போராட்டங்கள் உள்பட) நொந்து போய் இனிமேலும் இவர்களை ஏமாற்ற முடியாது என அள்ளிப்போடாமல் கொஞ்சமாக கிள்ளிப்போட்டிருக்கிறார்கள் . மெதுவாகத்தானே வாங்க முடியும். இதுக்கு துப்பு இல்லாமத் தானே நீங்க டெல்லிக்கு சலோ! டெல்லிக்கு சலோ! என்ற ரீதியில் போனீங்க. இதப்பத்தி கேக்க உங்களுக்கு என்ன அறுகதை இருக்கிறது?
மேற்கண்டவை எங்கள் கருத்து அல்ல. ததஜவின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு கனிமொழி எம்.பி அவர்களின் மூலமாக ததஜ நிர்வாகிகளை அழைத்து எப்படி கேட்கிறீர்கள் இட ஒதுக்கீடு எனக்கேட்டுததஜ நிர்வாகிகள் தந்த திட்டத்தின் அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு 3.5% வழங்கப்பட்டது. இப்பட்டியே படிப்படியாக கொஞ்சம் கொஞ்சமாகத் தான் கிடைக்கும் என தமுமுகவினரை அன்றைக்கு எதிர்த்து தென்சென்னை சார்பாக ஐஸ்ஹவுஸ் பகுதியில் நடந்த கூட்டத்தில் உங்கள் தலைவர் பாக்கர் பேசியது தான்.
இட ஒதுக்கீட்டுக்கே இப்படி என்றால் அப்ப நீங்க கேட்ட கேள்விக்கு?ஆக நீங்கள் வைக்கும் முட்டாள் தனமான வாதத்திற்கு உங்கள் தலைவரே அன்றைக்கு பதில் கொடுத்து விட்டார். ஓசியிலே இண்டெர் நெட் கிடைக்கிறது என்பதற்காக உக்காந்து உக்காந்து யோசிச்சி இப்படி கந்தலான கழுசடை வாதங்களை எழுதி வாங்கிக்கட்டிக் கொள்வதற்கு பதிலாக வேறு ஏதாவது நல்ல வேலை செய்யலாமே!

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons