Monday, February 7, 2011

அரசியலும் இஸ்லாமிய இயக்கங்களும்

ஜாக் : தங்களை தவ்ஹீத்வாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் இவர்கள், அடிக்கடி ஒற்றுமை பிரசுரம் வெளியிடுவார்கள். இவர்களைவிட்டு பிரிந்த அனைவரும் பாவிகள் என்று ஃபத்வா கொடுத்தார்கள். ஜாக் அமைப்பை சாராதவர்கள் குற்றம் செய்தவர்கள் என்று நோட்டீஸ் அடித்தார்கள். (தேவைப்படுவோருக்கு ஆதாரம் தரப்படும்.) நபி(ஸல்) அவர்களின் நடைமுறை இந்த காலத்திற்கு பொருந்தாது என்று பொதுமேடையில் பகிரங்கமாகவே சொன்னார்கள், சொல்கிறார்கள். ஆனால் குர்ஆன் ஹதீஸை பின்பற்றுவதாகவும் சொல்வார்கள். ததஜவினர் சந்தணத்தை பூசிக்கொண்டால், அவர்களை எதிர்க்க வேண்டும் என்பதற்காக சாக்கடையை தங்கள் மேல் பூசிக்கொள்வார்கள்.


சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பீட்டர் அல்போன்ஸை ஆதரித்து 15-04-200 6 15-04-2006 அன்று ஜாக்கின் மாநில செயலாளர் மற்றும் பிரச்சார பீரங்கியான கோவை அய்யூப் கடையநல்லுரில் ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்தார்.


ஏப்ரல் மாதத்தில் பகிரங்கமாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. ததஜ அதிமுகவை ஆதரித்ததால் மே மாதம் அந்தர்பலடி அடிக்கிறார் கமாலுதீன்.


'நம்முடைய பேச்சு, உயிர் மூச்சு தவ்ஹீத்! தவ்ஹீத். தவ்ஹீத் தவிர வேறல்ல. அரசியல்வாதிகளுக்கு ஆள்பிடிக்கும் மாயாஜாலப்பேச்சு, அது எவர் வாயிலிருந்து வந்தாலும் அவரை இனம் காண்போம், தனிமை படுத்துவோம். இணைவைக்கும் அரசியல்வாதிகளுக்காக எந்த ஏகத்துவவாதியையும் நாம் இழந்துவிடக் கூடாது'. – அல்ஜன்னத், மே-2006 20பக்கம் 20 என்று எழுதுகிறார்கள்.


பீ.ஜே யை திட்டுகிறோம் என நினைத்துக் கொண்டு சாக்கடை குளியல் நடத்தினார்கள்.



தவ்ஹீத் என்ற பெயரில் இவர்கள் எங்கே நம்மை கொண்டு போய் தள்ளப் போகிறார்கள் என்பதை சிந்தித்து செயல்படுங்கள். அல்ஜன்னத், மே 2006, பக்கம் 48



நம்மை பொறுத்தவரை அரசியல் சாக்கடையில் விழுந்துவிட்ட அனைவரும் சமமே. அது மூன்றெழுத்து அரசியல்வாதியாயினும் சரிதான். நான்கெழுத்து அரசியல்வாதி யாயினும் சரிதான். அல் ஜன்னத் மே 2006 2006 பக்கம் 50



ஆனால் ஏகத்துவவாதிகளோ(?) இந்த கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டுமென்று துடிக்கிறார்கள்.




பணம் பத்தும் செய்யும் என்பது பழமொழி


சே! சாக்கடை நாறுகிறது! - அல் ஜன்னத் மே 2006 பக்கம் 51




இவ்வாறு எழுதியவர்கள் பித்னாவில் ஆஸ்கார் விருதுபெற்ற பஸிலுல் இலாஹியை வேட்பாளராக நியமிக்கவேண்டுமென்று கோரி நடுரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
பார்க்க படம்

அதுமட்டுமின்றி உள்ளாட்சி தேர்தலில் ஜாக்கின் துணை செயலாளரான ஏர்வாடி சிராஜ் தேர்தலிலே போட்டியிட்டு வெற்றி பெற்று இன்றும் உள்ளாட்சி பதவியில் இருக்கிறார்.
இவ்வாறு நயவஞ்சக வேடமிடும் இந்த போலிதவ்ஹீத்வாதிகளை நாம் சட்டைசெய்ய வேண்டியதில்லை.

மனித நீதி பாசறை :

ஆர்ப்பாட்டம் கூடாது, போராட்டம் கூடாது, கொடி கூடாது, ஜனநாயகம் கூடாது, அபுஜஹல் தாக்க வந்த போது நபி(ஸல்)அவர்கள் கொடிபிடித்துக் கொண்டா இருந்தார்கள் என்றெல்லாம் மற்றவர்களை நக்கலடித்தவர்கள் இன்று கொடி, ஆர்ப்பாட்டம் என்று தங்களை மாற்றி 'அதிகாரம் மக்களுக்கே' எனும் கோஷத்துடன் வாக்களிக்கவும் இரவல் கட்சிக்காக பிரச்சாரம் செய்யவும் தயாராகிவிட்டார்கள். விடியல், மனித நீதி பாசறை, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா என பல பெயர்களில் இவர்கள் உலா வந்தாலும் இவர்களால் முஸ்லிம் சமுதாயத்திற்கு துரோகம் இழைக்கப்படவில்லை. எனவே இதையும் விட்டுவிடுவோம்.


ஜமாஅத்தே இஸ்லாமி : எம்.என்.பி யின் கொள்கையில் முக்கால் பாகத்தைக் கொண்டிருக்கும் இவர்களும் பிற மாநிலங்களில் கொடிபிடித்து அரசியல் அதிகாரத்திலும் ஈடுபடுகிறார்கள். ஒயிட் காலர் மற்றும் வி.ஐ.பிக்களுக்கு மட்டும் என தேர்ந்தெடுத்து அழைப்புபணி செய்வதால் குண்டுச்சட்டிக்குள்ளேயே குதிரையை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர். இவர்களால் சமுதாயத்திற்கு சாதக பாதகம் எதுவுமில்லை.


முஸ்லிம் லீக் :


அரசியலில் தனித்தன்மை இல்லாததால் இருப்பவனையும் இறந்தவனையும் வணங்கிக்கொண்டு மிகப்பெரிய இணைவைப்பை செய்து கொண்டிருக்கின்றனர். பதவிக்காக செயல்படும் இந்த பெயர்தாங்கி முஸ்லிம்களால் சமுதாயத்துக்கு எந்த நன்னையும் இல்லை.
பார்க்க : படம்

 

ஆனால் தமிழக முஸ்லிம் சமுதாயத்தில் இரு இயக்கங்கள் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இவ்விரு இயக்கங்களும் சமுதாயத்திற்கு செய்த, செய்கின்ற நன்மைகள் என்ன? சமுதாயத்தின் பெயரைக்கூறி சமுதாய மக்களை எவ்வாறு வஞ்சித்தன, துரோகம் செய்தனஎன்பதை நாம் அடுத்ததாக காண்போம்.


0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons