Monday, February 21, 2011

ம.ம.க. மௌனம் கலைந்தது!! மானம் காத்ததா?





மாற்று அரசியல், ஒரு சீட் கலாச்சாரத்தை ஒழிப்போம் என்று மேடைதோறும் கர்ஜித்தார்கள், எங்களுக்கு சீட் முக்கியம் இல்லை சமுதாய மானம் தான் முக்கியம் என்றார்கள், கலைஞர் தந்த ஒரு MP சீட்டை வாங்காமல் நாங்கள் மானம் காத்தோம் என்றார்கள், ஆஹா என்ன கொள்கையப்பா என்று கழக கண்மணிகள் மெய் சிலிர்த்தார்கள், மப் தேர்தலில் தோல்வியை தழுவிய உடன், மக்கள் எங்கள் சின்னத்தில் தான் பொத்தானை அழுத்தினார்கள் ஆனால் அது தி.மு.க. சின்னத்தில் விழுவதுபோல் ஆளும் கட்சி முறைகேடு செய்து விட்டது, ஆகையால் ஓட்டுச் சீட்டு முறையையை மீண்டும் கொண்டு வரவேண்டும் அப்படி கொண்டு வந்தால் தான் அடுத்த தேர்தலில் போட்டியிடுவோம், நாங்கள் தனித்து நின்று 7 தொகுதிவரை வெள்ளகூடிய சக்தி பெற்றுள்ளோம் என்றார்கள், பின்பு என்ன என்ன மாயமோ தெரியவில்லை ஆ.தி.மு.க. விடம் தேர்தலுக்கு ஆறுமாதத்திற்கு முன்பே கூட்டணி சேர்ந்தார்கள், அம்மா வீட்டு நாய் இறந்தாலும் முதலில் இவர்கள் இரங்கல் அறிக்கை விட்டார்கள், தி.மு.க. வை அம்மா விமர்சிக்கும் முன் இவர்கள் விமர்ச்சன அறிக்கைகளை விட்டு நாங்கள் அம்மா கூட தான் இருக்கிறோம் என்பதை சொல்லிக்கொண்டு வந்தார்கள், சரி அம்மா உங்களுக்கு அப்படி என்ன தான் செய்து விட போகிறார்கள், நீங்கள் எதனை தொகுதி கேட்டு உள்ளீர்கள்?, அம்மா எதனை கொடுப்பதாக சொன்னார்கள்?, எத்தனை கொடுத்தால் நீங்கள் ஏற்பீர்கள்? என்று கேட்ட எல்லா கேள்விக்கும் மௌனமே பதிலாக இருந்தது (அம்மாவின் ஆணையாக கூட இருக்கலாம்), கடந்த காலங்களில் லதிப் தலைமையிலான தேயலீக் பெற்ற ஐந்து தொகுதிகளை கூட இவர்களின் நன்றி விசுவாசத்தின் மூலம் பெற முடிய வில்லை, மூன்று தொகுதிகள் எங்களுக்கு போதுமானது என்று பேட்டி வேறு கொடுக்கிறார்கள் இதுதான் மானம் காக்கும் லட்சணமா? 
இரண்டு தொகுதிகளை ஒதிக்கிய கிர்ஷ்ணசாமி இது போதாது எங்களுக்கு ஒன்பது வேண்டும் என்கிறார், நடிகர் கார்த்திக் கூட பத்து தொகுதிகள் வேண்டும் என்கிறார், இந்த கட்சிகள் எல்லாம் தேர்தல் வந்தால்தான் கட்சி இருப்பதே நமக்கு தெரிய வரும், அப்படி பட்ட கட்சிகள் செய்யும் குறித்த பட்ச ஆட்சயபனையை கூட மானம் காக்க வந்த ம.ம.க, விற்கு செய்ய வக்கில்லாமல் போனது, இவர்களை சமுதாயமும் வரலாறும் மன்னிக்கவே மன்னிக்காது என்பது தின்னம்

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons